![](pmdr0.gif)
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 8c
4. யுத்த காண்டம் /பாகம் 1/ படலம் 5-7 (877 - 1303)
kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 8c /canto 4 (verses 877 - 1303 )
In tamil script, Unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections.
Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2007.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
உ
செந்திலாண்டவன் துணை
திருச்சிற்றம்பலம்
கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
பாகம் 8c /4. யுத்த காண்டம்
4. யுத்த காண்டம் /படலம் 5.
மூன்றாநாட் பானுகோபன் யுத்தப் படலம் (877-876)
877 - இரவிவந் துற்றுழி எழுந்து சூர்மகன்
மரபுளி நாட்கடன் வழாமல் ஆற்றியே
செருவினில் உடைந்திடு சிறுமை சிந்தியாய்
பொருவரு மாயையைப் போற்றல் மேயினான். - 1
878 - போற்றினன் முன்னுறு பொழுதின் மாயவள்
கோற்றொழில் கன்றிய குமரன் முன்னரே
தோற்றினள் நிற்றலுந் தொழுத கையினன்
பேற்றினை முன்னியே இனைய பேசுவான். - 2
879 - தாதைதன் அவ்வைகேள் சண்முக கத்தவன்
தூதுவ னோடுபோ£¢த் தொழிலை ஆற்றினேன்
ஏதமில் மானமும் இழந்து சாலவும்
நோதக உழந்தனன் நோன்மை நீங்கினேன். - 3
880 - துன்னல ரோடுபோர் தொடங்கி ஈற்றினில்
பின்னிடு வார்பெறும் பிழையும் பெற்றனன்
என்னினி வரும்பழி இதற்கு மேலென்றான்
அன்னது மாயைகேட் டறைதல் மேயினாள். - 4
881 - மறைநெறி விலக்கினை வானு ளோர்தமைச்
சிறையிடை வைத்தனை தேவர் கோமகன்
முறையினை அழித்தனை முனிவர் செய்தவங்
குறையுறு வித்தனை கொடுமை பேணினாய். - 5
882 - ஓவருந் தன்மையால் உயிர்கள் போற்றிடும்
மூவரும் பகையெனின் முனிவர் தம்மொடு
தேவரும் பகையெனின் சேணில் உற்றுளோர்
ஏவரும் பகையெனின் எங்ஙன் வாழ்தியால். - 6
883 - பிழைத்திடு கொடுநெறி பெரிதுஞ் செய்தலாற்
பழித்திறம் பூண்டனை பகைவர் இந்நகர்
அழித்தமர் இயற்றிட அவர்க்குத் தோற்றனை
இழைத்திடும் விதியினை யாவர் நீங்கினார். - 7
884 - நூற்றிவண் பற்பல நுவலின் ஆவதென்
மாற்றருந் திறலுடை மன்னன் மைந்தநீ
சாற்றுதி வேண்டுவ தருவன் என்றலும்
ஆற்றவும் மகிழ்சிறந் தனையன் கூறுவான். - 8
885 - நின்றமர் இயற்றியே நென்னல் என்றனை
வென்றனன் ஏகிய வீர வாகுவை
இன்றனி கத்தொடும் ஈறு செய்திட
ஒன்றொரு படையினை உதவு வாயென்றான். - 9
886 - அடல்வலி பிழைத்திடும் அவுணன் சொற்றன
கெடலரும் மாயவள் கேட்டுத் தன்னொரு
படையினை விதித்தவன் பாணி நல்கியே
கடிதினில் ஒருமொழி கழறல் மேயினாள். - 10
887 - மற்றிது விடுத்தியால் மறையில் கந்தவேள்
ஒற்றனைப் பிறர்தமை உணர்வை வீட்டியே
சுற்றிடும் வாயுவின் தொழிலுஞ் செய்யுமால்
இற்றையிற் சயமுன தேகு வாயென்றாள். - 11
888 - உரைத்திவை மாயவள் உம்பர் போந்துழி
வரத்தினிற் கொண்டிடு மாய மாப்படை
பரித்தவன் நெருநலிற் பழியை நீங்கியே
பெருந்திடும் பெருமிதப் பெற்றி கூடினான். - 12
889 - கூர்ப்புறு பல்லவங் கொண்ட தூணியைச்
சீர்ப்புறத் திறுக்கிமெய் செறித்துச் சாலிகை
கார்ப்பெருங் கொடுமரங் கரங்கொண் டின்னதோர்
போர்ப்பெருங் கருவிகள் புனைந்து தோன்றினான். - 13
890 - காற்படை அழற்படை காலன் தொல்படை
பாற்படு மதிப்படை பரிதி யோன்படை
மாற்படை அரன்படை மலர யன்படை
மேற்படு சூர்மகன் எடுத்தல் மேயினான். - 14
891 - மேனவப் படைமதில் விரவு சாலையுள்
வானவப் படைகொடு வாய்தல் போந்தனன்
ஆனவப் படைதரும் ஆடல் வில்லினான்
தானவப் படைஞர்கள் தொழுது தாழ்ந்திட. - 15
892 - சயந்தனைப் பொருதிடுந் தார்பெய் தோளினான்
சயந்தனைப் பொருதநாட் சமரிற் கொண்டதோர்
சயந்தனத் தேறினன் தகுவர் யாவருஞ்
சயந்தனைப் பெறுகென ஆசி சாற்றவே. - 16
893 - ஒப்பறு செறுநர்மேல் உருத்துப் போர்செயத்
துப்புறு சூர்மகன் தொடர்கின் றானெனச்
செப்புறும் ஒற்றர்கள் தெரிந்து போமென
எப்புறத் தானையும் எழுந்து போந்தவே. - 17
894 - பரிபதி னாயிர வௌ¢ளம் பாய்மத
கரிபதி னாயிர வௌ¢ளங் காமர்தேர்
ஒருபதி னாயிர வௌ¢ளம் ஒப்பிலா
இருபதி னாயிர வௌ¢ளம் ஏனையோர். - 18
895 - நாற்படை இவ்வகை நடந்து கோமகன்
பாற்பட விரவின பரவு பூழிகள்
மாற்படு புணரிநீர் வறப்பச் சூழ்ந்ததால்
மேற்படு முகிலினம் மிசைய வந்தென. - 19
896 - திண்டிறல் அனிகமீச் சென்ற பூழிகள்
மண்டல முழுவதும் வரைகள் யாவையும்
அண்டமும் விழுங்கியே அவைகள் அற்றிட
உண்டலின் அடைந்தன உவரி முற்றுமே. - 20
897 - முரசொடு துடிகுட முழவஞ் சல்லரி
கரடிகை தண்ணுமை உடுக்கை காகளம்
இரலைக ளாதியாம் இயங்கள் ஆர்த்தன
திருநகர் அழியுமென் றரற்றுஞ் செய்கைபோல். - 21
898 - உழையுடைக் கற்பினர் உரையிற் சென்றிடா
தழையுடைப் பிடிக்குநீர் தணிக்கும் வேட்கையால்
புழையுடைத் தனிக்கரம் போக்கிப் பொங்குசூல்
மழையுடைத் திடுவன மதங்கொள் யானையே. - 22
899 - கார்மிசைப் பாய்வன கதிர வன்தனித்
தோ¢மிசைப் பாய்வன சிலையிற் பாய்வன
பார்மிசைப் பாய்வன பாரி டத்தவர்
போர்மிசைப் பாய்வன புரவி வௌ¢ளமே. - 23
900 - அருளில ராகிய அவுணர் மாண்டுழித்
தெருளுறும் அவ்வவர் தெரிவை மாதர்கள்
மருளொரு துன்புறும் வண்ணங் காட்டல்போல்
உருளுவ இரங்குவ உலப்பில் தேர்களே. - 24
901 - கரிந்திடு மேனியுங் கணிப்பில் தானவர்
தெரிந்திடு மாலைசூழ் செய்ய பங்கியும்
விரிந்திடு நஞ்சுபல் லுருவ மேவுறீஇ
எரிந்திடும் அங்கிகான் றென்னத் தோன்றுமே. - 25
902 - வேறு
பொங்கு வெங்கதிர் போன்றொளிர் பூணினர்
திங்கள் வாளெயிற் றார்முடி செய்யவர்
துங்க அற்புதர் பொன்புகர் தூங்குவேல்
அங்கை யாளர் அசனியின் ஆர்த்துளார். - 26
903 - நீள மர்க்கு நெருநலில் போந்துபின்
மீளு தற்குடைந் தார்தமை வீட்டுதும்
வாளி னுக்கிரை யாவென்று வாய்மையால்
சூளி சைத்துத் தொடர்ந்தனர் வீரரே. - 27
904 - ஓடு தேரின்உ வாக்களின் மானவர்
நீடு கையின்நி வந்துறு கேதனம்
ஆடி விண்ணை அளாவுவ தாருவைக்
கூடி வேகொல் கொடியெனுந் தன்மையால். - 28
905 - கோலின் ஓங்கு கொடியுங் கவிகையுந்
தோலும் ஈண்டலிற் சூழிரு ளாயின
மாலை சூழ்குஞ்சி மானவர் வன்கையில்
வேலும் வாளும் பிறவும்வில் வீசுமே. - 29
906 - இன்ன தன்மை இயன்றிடத் தானைகள்
துன்னு பாங்கரிற் சூழ்ந்து படர்ந்திட
மன்னன் மாமகன் மாநகர் நீங்கியே
பொன்ன வாம்புரி சைப்புறம் போயினான். - 30
907 - போய காலைப் புறந்தனில் வந்திடும்
வேயி னோர்களின் வெம்பரி மாமுகம்
ஆயி ரங்கொள் அவுணனை நோக்கியே
தீய சூர்மகன் இன்னன செப்புவான். - 31
908 - ஈசன் விட்ட குமரன் இருந்திடும்
பாச றைக்களந் தன்னிற் படர்ந்துநீ
மாசி லாவிறல் வாகுவைக் கண்ணுறீஇப்
பேச லாற்றுதி இன்னன பெற்றியே. - 32
909 - மன்னன் ஆணையின் மண்டமர் ஆற்றியே
தன்னை இன்று தடிந்திசை பெற்றிட
உன்னி வந்தனன் ஒல்லையின் ஏகுதி
முன்னை வைகலிற் போரென்றும் உன்னலாய். - 33
910 - என்ற மாற்றம் எனதுரை யாகவே
வென்றி யோடு புகன்றனை மீள்கென
நின்ற தூதனை நீசன் விடுத்தலும்
நன்றி தென்று நடந்துமுன் போயினான். - 34
911 - ஏம கூட மெனப்பெய ராகிய
காமர் பாசறைக் கண்ணகல் வைப்புறீஇ
நாம வேற்படை நம்பிக் கிளவலாம்
தாம மார்பனைக் கண்டிவை சாற்றுவான். - 35
912 - எல்லை தன்னை இருஞ்சிறை வீட்டிய
மல்லல் அங்கழல் மன்னவன் மாமகன்
ஒல்லை இப்பகல் உன்னுயிர் மாற்றுவான்
செல்லு கின்றனன் செப்பிய சூளினான். - 36
913 - ஏவி னான்எனை இத்திறங் கூறியே
கூவி நின்னைக் கொடுவரு வாயென
மேவ லாள விரைந்தமர்க் கேகுதி
நாவ லோயென வேநவின் றானரோ. - 37
914 - தூதன் இவ்வகை சொற்றெதிர் நிற்றலும்
மூத குந்திறல் மொய்ம்பன் நகைத்தியான்
ஆத வன்புகை ஆருயிர் உண்டிடப்
போது கின்றனன் போய்ப்புகல் வாயென்றான். - 38
915 - ஒற்றன் இத்திறம் ஓர்ந்துடன் மீடலுஞ்
செற்ற மிக்க திறல்கெழு மொய்ம்பினான்
சுற்ற மோடு தலைவர்கள் சூழ்ந்திடக்
கொற்ற வேற்கைக் குமரன்முன் நண்ணினான். - 39
916 - எங்கு மாகி இருந்திடு நாயகன்
பங்க யப்பொற் பதத்தினைத் தாழ்ந்தெழீஇச்
செங்கை கூப்பிமுன் நிற்றலுஞ் செவ்வியோன்
அங்க ணுற்ற தறிந்திவை கூறுவான். -
0
917 - நென்னல் ஓடும் நிருதன் தனிமகன்
உன்னை முன்னி உரனொடு போந்துளான்
துன்னு தானைத் துணைவர்கள் தம்மொடு
முன்னை வைகலின் ஏகுதி மொய்ம்பினோய். -
1
918 - போயெ திர்ந்து பொருதி படைகளாய்
ஏய வற்றிற் கெதிரெதிர் தூண்டுதி
மாயை வஞ்சன் புரிந்திடின் வந்துநந்
தூய வேற்படை துண்ணென நீக்குமால். -
2
919 - போதி என்று புகன்றிட அப்பணி
மீது கொண்டு விடைகொண்டு புங்கவன்
பாதம் வந்தனை செய்து படர்ந்தனன்
தூது போய்அமர் ஆற்றிய தொன்மையோன். -
3
920 - துணையு ளார்களுஞ் சுற்றமுள் ளார்களுங்
கணவர் தங்களிற் காவலர் யாவரும்
அணிகொள் தேர்புக ஆடலந் தோளினான்
இணையி லாத்தன் இரதத்தி லேறினான். -
4
921 - கூறும் எல்லையில் இச்செயல் நோக்கியே
ஊறில் பூதரொ ராயிர வௌ¢ளமும்
மாறி லாதவ ரையும் மரங்களும்
பாறு லாவு படையுங்கொண் டேய்தினார். -
5
922 - சார தங்கெழு தானைகள் ஈண்டியே
காரி னங்களிற் கல்லென ஆர்ப்புற
வீர மொய்ம்பின் விடலையைச் சூழ்ந்தனர்
ஆரும் விண்ணவர் ஆசி புகன்றிட. -
6
923 - மேன காலை விசயங்கொள் மொய்ம்பினான்
தானை யானவுந் தம்பியர் யாவரும்
ஏனை யோ£¢களும் ஈண்டச்சென் றெய்தினான்
பானு கோபன் படரும் பறந்தலை. -
7
924 - வேறு
தேர்த்திடும் பாரிடஞ் செறியும் வௌ¢ளமும்
கார்த்திடு தானவக் கடலும் நேர்புறீஇ
ஆர்த்தனர் இகலினர் ஆற்றல் கூறியே
போர்த்தொழில் முறையினைப் புரிதல் மேயினார். -
8
925 - கோடுகள் முழங்கின குறுங்கண் ஆகுளி
பீடுற இரட்டின பேரி ஆர்த்தன
மூடின வலகைகள் மொய்த்த புள்ளினம்
ஆடினன் நடுவனும் அமரர் நோக்கவே. -
9
926 - இலையயில் தோமரம் எழுத்தண் டொண்மழு
வலமொடு வச்சிரம் ஆழி மாப்படை
தொலைவறு முத்தலைச் சூல மாதிய
சிலைபொதி கணையுடன் அவுணர் சிந்தினார். - 50
927 - முத்தலைக் கழுவொடு முசலம் வெங்கதை
கைத்தலத் திருந்திடு கணிச்சி நேமிகள்
மைத்தலைப் பருப்பதம் மரங்க ளாதிய
அத்தலைப் பூதரும் ஆர்த்து வீசினார். - 51
928 - பணிச்சுடர் வாளினால் பாணி சென்னிதோள்
துணித்தனர் குற்றினர் சுரிகை ஆதியால்
குணிப்பறும் எழுக்கதை கொண்டு தாக்கினார்
கணப்படை யொடுபொரும் அவுணர் காளையர். - 52
929 - பிடித்தனர் அவுணரைப் பிறங்கு கைகளால்
அடித்தனர் கிழித்தனர் அணிய கந்தரம்
ஒடித்தனர் மிதித்தனர் உருட்டு கின்றனர்
புடைத்தனர் எழுக்களால் பூத வீரரே. - 53
930 - வாசியும் வயவரும் மாயச் சாரதர்
ஆசறு கரங்களால் அள்ளி அள்ளியே
காய்சின இபங்களில் கணிப்பில் தேர்களில்
வீசிநின் றெற்றினர் அவையும் வீழவே. - 54
931 - ஓதவெங் கடல்களும் ஊழி வன்னியும்
மேதகு வலிகொடு வெகுளி வீங்கியே
ஆதியின் மாறுகொண் டமர்செய் தாலெனப்
பூதரும் அவுணரும் பொருதிட் டாரரோ. - 55
932 - குழகியல் அவுணரும் கொடிய பூதரும்
கழகெனும் உரைபெறு களத்தில் போர்செய
ஒழுகிய சோரியா றூனை வேட்டுலாய்
முழுகிய கரண்டம்விண் மொய்த்த புள்ளெலாம். - 56
933 - துணிந்தன கைத்தலம் துணிந்த தோட்டுணை
துணிந்தன சென்னிகள் துணிந்த வாலுரம்
துணிந்தன கழலடி துணிந்த மெய்யெலாம்
துணிந்தன வலிசில பூதர் துஞ்சினா£¢. - 57
934 - முடித்தொகை அற்றனர் மொய்ம்பும் அற்றனர்
அடித்துணை அற்றனர் அங்கை அற்றனர்
வடித்திடு கற்பொடு வலியும் அற்றனர்
துடித்தனர் அவுணரும் அநேகர் துஞ்சினார். - 58
935 - வசையுறும் அவுணரின் மன்னர் யாவரும்
இசைபெறு பூதரின் இறைவ ருங்கெழீஇத்
திசையொடு திசையெதிர் செய்கை போலவே
அசைவில ராகிநின் றமர தாற்றினார். - 59
936 - மால்கிளர் தீயவர் மலைகொள் சென்னியைக்
கால்கொடு தள்ளினர் களேவ ரந்தனைப்
பால்கிளர் பிலத்தினுட் படுத்துச் சென்றனர்
தோல்களை உரித்தனர் சூல பாணிபோல். - 60
937 - அரித்திறல் அடக்கினா அவுண வீரர்தம்
வரத்தினை ஒழித்தனர் மாய நூறியே
புரத்தினை அழித்தனர் போரின் மாதொடு
நிருத்தம தியற்றினர் நிமலன் போலவே. - 61
9389 - கங்குலின் மேனியர் ஆழிக் கையினர்
துங்கமொ டவுணரைத் தொலைத்துத் துண்ணெனச்
சங்கம திசைத்தனர் தண்டந் தாங்குவார்
செங்கண்மால் பொருவினர் சிலவெம் பூதரே. - 62
939 - அயர்ப்புறு மால்கரி அரற்ற வேசுலாய்க்
குயிற்றிய மணிநெடுங் கோடு வாங்குவார்
உயற்படு கற்பம்அங் கொன்றில் ஏனத்தின்
எயிற்றினைப் பறித்திடுங் குமரன் எனனவே. - 63
940 - கொலைபயில் கரிமுகங் கொண்டு பூதர்தம்
மலையிடை மறைந்தனர் மறித்துந் தோன்றியே
அலமரு சமர்புரிந் தவுண வீரரில்
சிலர்சிலர் தாரகன் செயற்கை மேயினார். - 64
941 - மாலொடு பொருதனர் மலர யன்றனைச்
சாலவும் வருத்தினர் சலதி வேலையின்
பாலர்கள் அவுணரிற் பலர்ச லந்தரன்
போலுடல் கிழிந்தனர் பூதர் நேமியால். - 65
942 - போன்றவர் பிறரிலாப் பூத நாயகர்
மூன்றிலைப் படைகளின் மூழ்கித் தீமைபோய்
வான்றிகழ் கதியும்வா லுணர்வும் எய்தியே
தோன்றினர் அந்தகா சுரனைப் போற்சிலர். - 66
943 - வேறு
இலக்க வீரரும் எண்மரும் அத்துணை
விலக்கில் வில்லுமிழ் வெங்கணை மாரிதூய்
ஒலிக்கொள் சூறையின் ஒல்லையிற் சுற்றியே
கலக்கி னார்கள் அவுணக் கடலினை. - 67
944 - வேறு
மிடைந்தகண வீரர்களும் மேலவரு மாக
அடைந்தமர் இயற்றிஅவு ணப்படைகள் மாயத்
தடிந்தனர் ஒழிந்தன தடம்புனல் குடங்கர்
உடைந்தவழி சிந்தியென ஓடியன அன்றே. - 68
945 - ஓடியது கண்டனன் உயர்த்துநகை செய்தான்
காடுகிளர் வன்னியென வேகனலு கின்றான்
ஆடல்செய முன்னியொ ரடற்சிலை எடுத்தான்
தோடுசெறி வாகைபுனை சூரனருள் மைந்தன். - 69
946 - வாகுபெறு தேர்வலவ னைக்கடிது நோக்கி
ஏகவிடு கென்றிரவி தன்பகை இயம்பபப்
பாகவினி தென்றுபரி பூண்டஇர தத்தை
வேகமொடு பூதர்படை மீதுசெல விட்டான். - 70
947 - பா£¤டர்கள் சேனையிடை பானுவைமு னிந்தோன்
சேருதலும் ஆங்கது தெரிந்துதிறல் வாகு
சாருறு பெருந்துணைவா¢ தம்மொடு விரைந்தே
நேரெதிர் புகுந்தொரு நெடுஞ்சிலை எடுத்தான். - 71
948 - எடுத்திடும்வில் வீரனை எதிர்ந்தவுணன் மைந்தன்
வடித்திடு தடக்கைதனில் வார்சிலை வளைத்துத்
தடித்தன குணத்தொலி தனைப்புரிய அண்டம்
வெடித்தன முடித்தலை துளக்கினர்கள் விண்ணோர்கள். - 72
949 - எண்ணில்பல கோடிஉரும் ஏறுருவம் ஒன்றாய்
வண்ணமிகு மின்னிடை மறைந்தொலிசெய் தென்ன
விண்ணுற நிவந்தவியன் மொய்ம்புடைய வீரன்
நண்ணலர் துணுக்கமுற நாணிசை எடுத்தான். - 73
950 - நாணொலி செவித்துணையின் நஞ்சமென எய்தத்
தூணிகலும் வாகுடைய சூ£¢மதலை சீறி
வாணிலவு கான்றபிறை வாளியுல வாமற்
சேணுநில னுந்திசைக ளுஞ்செறிய விட்டான். - 74
951 - மாமுருக வேள்இளவன் மற்றது தெரிந்தே
காமர்பிறை போன்றுகதி ரென்னவெயில் கான்று
தீமுகம தாம்அளவில் செய்யசர மாரி
தூமுகிலும் நாணமுற வேநெடிது தூர்த்தான். - 75
952 - ஐயன்விடு வெஞ்சரமும் ஆதவனும் அஞ்சும்
வெய்யன்விடு வெஞ்சரமும் மேவியெதிர் கவ்வி
மொய்யுடைஅ ராவினமு னிந்திகலி வெம்போர்
செய்வதென மாறுகொடு சிந்துவன தம்மில். - 76
953 - வேறு
கரிந்திடு மாமுகில் கடந்தன வானவர்
புரிந்திடு சேண்நெறி புகுந்தன மாலயன்
இருந்திடும் ஊரையும் இகந்தன போயின
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே. - 77
954 - தெண்டிரை நேமிகள் சென்றன சூழ்வன
எண்டிசை மாநகர் எங்கணும் ஏகுவ
மணடல மால்வரை மண்டியு லாவுவ
அண்டமு லாவுவ அங்கவர் தேர்களே. - 78
955 - மங்குலின் மேலதோ மண்டல மார்வதோ
செங்கணன ஊரதோ தெண்டிரை சேர்வதோ
இங்குளர் ஏறுதேர் எங்குள வோவெனாச்
சங்கையின் நாடினார் தங்களில் வானுளோ£¢. - 79
956 - மன்னிய மாமுகில் வண்ணம தாயினர்
அன்னதொல் வீரர்கள் அண்மிய தேரவை
மின்னுவின் மேவுவ வெம்மையில் வீசிய
துன்னிய வாளிகள் தொன்மழை போல்வவே. - 80
957 - ஆங்கவர் தேர்களில் ஆண்டுறு பாகர்கள்
தூங்கலில் வாசிகள் சேண்புடை சூழ்வுற
தீங்கதிர் வாளிகள் சேண்புடை சூழ்வுற
ஏங்கினர் ஓடினர் ஈண்டிய வானுளோர். - 81
958 - வேறு
பூசல் இவ்வகை புரிந்திடு கின்றுழிப் புரைதீர்
வாச வன்மகன் தனைச்சிறை செய்திடும் வலியோன்
ஆசு கங்களில் ஆசுக மாயிரந் தூண்டி
ஈசன் மாமகன் சேனைநா யகன்நிறத் தெய்தான். - 82
959 - ஆக மீதிலோ ராயிரம் பகழிபுக் கழுந்த
ஏக வீரனாம் இளவலும் முனிவுகொண் டேவி
வாகை வெங்கணை பத்துநூ றவுணர்கோன் மதலை
பாகு மாக்களும் இரதமும் ஒருங்குறப் படுத்தான். - 83
960 - படுக்க வெய்யவன் வேறொரு வையமேற் பாய்ந்து
தடக்கை வில்லினை வளைக்குமுன் ஆயிரஞ் சரத்தைத்
தொடுக்க மற்றவன் உரந்தனைப் போழ்தலுந் துளங்கி
இடுக்கண் எய்தினன் ஆர்த்தனர் பூதர்கள் எவரும். - 84
961 - பூத ரார்த்திடு துழனியைக் கேட்டலும் பொருமிக்
காதில் வெவ்விடம் உய்த்திடு திறனெனக் கனன்றே
ஏத மில்லதோர் பண்ணவப் படைகளால் இமைப்பில்
தூதன் ஆற்றலைத் தொலைக்குவன் யானெனத் துணிந்தான். - 85
962 - இணையில் சூர்மகன் வாருணப் படைக்கலம் எடுத்துப்
பணிவு கொண்டகார் முகந்தனில் பூட்டிநீ படா¢ந்து
கணிதம் இல்லதோர் நீத்தமாய்ச் சாரதர் கணத்தைத்
துணைவர் தங்களைத் தூதனை முடிக்கெனத் தொடுத்தான். - 86
963 - தொடைப்பெ ரும்படை கடைமுறை உலகெலாந் தொலைக்கும்
அடற்பெ ருங்கடல் *ஏழினும் பரந்துபோய் ஆன்று
தடப்பெ ரும்புனல் நீத்தமாய் விசும்பினைத் தடவி
இடிப்பெ ருங்குரல் காட்டியே ஏகிய திமைப்பில்.
( * பா-ம் - ஏழினின்.) - 87
964 - கண்ட வானவா¢ துளங்கினர் பூதருங் கலக்கங்
கொண்டு நின்றனர் உணர்ந்திலர் துணைவருங் குலைந்தார்
அண்டர் நாயகற் கிளையவன் நோக்கியே அகிலம்
உண்டு லாவரும் அங்கிமாப் பெரும்படை உய்த்தான். - 88
965 - புகையெ ழுந்தன வெம்மையும் எழுந்தன புலிங்கத்
தொகையெ ழுந்தன ஞெகிழிகள் எழுந்தன சுடரின்
வகையெ ழுந்தன பேரொலி எழுந்தன வன்னிச்
சிகையெ ழுந்தன செறிந்தன வானமுந் திசையும். - 89
966 - முடிக்க லுற்றதீப் பெரும்படை செறியமூ தண்டம்
வெடிக்க லுற்றன வற்றின கங்கைமீன் தொகுதி
துடிக்க லுற்றன சுருங்கின அளக்கர்தொல் கிரிகள்
பொடிக்க லுற்றன தளர்ந்துமெய் பிளந்தனள் புவியும். - 90
967 - தீர்த்தன் ஏவலோன் விடுபடை இன்னணஞ் சென்று
மூர்த்த மொன்றினில் வாருணப் படையினை முருக்கி
நீர்த்தி ரைப்பெரு நீத்தமும் உண்டுமேல் நிமிர்ந்து
போர்த்த தாமெனச் சுற்றிய தவுணர்கோன் புறத்தில். - 91
968 - சுற்று கின்றஅப் படையினைக் கண்டுசூர் புதல்வன்
செற்ற மேற்கொண்டு மாருதப் பெரும்படை செலுத்த
மற்ற தூழிவெங் காலுருக் கொண்டுமன் னுயிர்கள்
முற்றும் அண்டமுந் துளங்குறச் சென்றது முழங்கி. - 92
969 - மாரு தப்படை சென்றுதீப் படையினை மாற்றிச்
சார தப்படை மேலட வருதலுந் தடந்தோள்
வீரன் மற்றது கண்டுவெம் பணிப்படை விடுத்தான்
சூரி யத்தனிக் கடவுளுந் தன்னுளந் துளங்க. - 93
970 - ஆயி ரம்பதி னாயிரம் இலக்கமோ டநந்தந்
தீய ப·றலைப் பன்னகத் தொகுதியாய்ச் செறிந்து
காயம் எங்கணும் நிமிர்ந்துசெந் தீவிடங் கான்று
பாயி ருஞ்சுடர்க் கதிரையும் மறைத்தது படத்தால். - 94
971 - வெங்கண் நாகங்கள் உமிழ்கின்ற அங்கியும் விடமும்
மங்குல் வானமுந் திசைகளும் மாநில வரைப்பும்
எங்கும் ஈண்டிய இரவினிற் புவியுளோர் யாண்டும்
பொங்கு தீச்சுடர் அளப்பில மாட்டுதல் போல. - 95
972 - உலவை மாப்படை உண்டிடும் அங்கியை ஒருங்கே
வலவை நீர்மையால் தம்முழை வரும்படி வாங்கி
அலகில் வெம்பணி விடுத்தென அன்னவை உமிழ்தீக்
குலவு கின்றன புகையெனக் கொடுவிடங் குழும. - 96
973 - இனைய கொள்கையாற் பன்னகப் பெரும்படை ஏகி
முனமெ திர்ந்திடு மாருதப் படையினை முனிந்து
துனைய வுண்டுதன் மீமிசைச் சேறலுந் தொன்னாட்
கனலி யைத்தளை பூட்டிய கண்டகன் கண்டான். - 97
974 - இன்ன தேயிதற் கெதிரென அவுணர்கோன் எண்ணிப்
பொன்னி ருஞ்சிறைக் கலுழன்மாப் படையினைப் போக்க
அன்ன தேகலும் வெருவியே ஆற்றலின் றாகிப்
பன்ன கப்படை இரிந்தது கதிர்கண்ட பனிபோல். - 98
975 - ஆல வெம்பணிப் படைமுரிந் திடுதலும் ஆர்த்துக்
கால வேகத்தின் உவணமாப் பெரும்படை கலுழன்
கோலம் எண்ணில புரிந்துநேர் வந்திடக் குரிசில்
மேலை நந்தியந் தேவன்மாப் படையினை விடுத்தான். - 99
976 - சீற்ற மாய்அண்ணல் நந்திதன் பெரும்படை செலுத்த
நூற்று நூற்றுநூ றாயிர கோடிநோன் கழற்கால்
ஏற்றின் மேனிகொண் டுலகெலாம் ஒருங்குற ஈண்டி
ஆற்ற செய்துயிர்த் தார்த்தது மூதண்டம் அதிர. - 100
977 - களனெ னப்படு நூபுரங் கழலிடை கலிப்ப
அளவில் கிங்கிணித் தாமங்கள் கந்தரத் தார்ப்ப
ஔ¤று பேரிமில் அண்டகோ ளகையினை உரிஞ்ச
வளரு நீண்மருப் புலகெலாம் அலைப்பவந் ததுவே. - 101
978 - திரையெ றிந்திடும் அளக்கர்உண் டுலவுசேண் முகிலின்
நிரையெ றிந்தது பரிதிதேர் எறிந்தது நெடிதாந்
தரையெ றிநதது திசைக்கரி எறிந்தது தடம்பொன்
வரையெ றிந்தது குலகிரி எறிந்தது மருப்பால். - 102
979 - நந்தி மாப்படை இன்னணம் ஏகியே நணுகி
வந்த காருடப் படையினை விழுங்கிமாற் றலனைச்
சிந்து கின்றனன் என்றுசென் றிடுதலுந் தெரியா
அந்த கன்படை தொடுத்தனன் அவுணர்கட் கரசன். - 103
980 - தொடுத்த அந்தகப் படையையும் விடைப்படை துரந்து
படுத்து வீட்டிய தன்னதன் மிடலினைப் பாராக்
கடித்து மெல்லிதழ் அதுக்கியே அயன்படைக் கலத்தை
எடுத்து வீசினன் இந்திரன் பதிகனற் கீந்தோன். - 104
981 - வீசுநான்முகப் படைக்கலம் வெகுண்டுவிண் ணெறிபோய்
ஈசன் ஊர்திதன் படையினைக் காண்டலும் இடைந்து
நீசன் ஏவலின் வந்தனன் நின்வர வுணரேன
காய்சி னங்கொளேல் எனத்தொழு துடைந்தது கடிதின். - 105
982 - நூன்மு கத்தினில் விதித்திடு நூற்றிதழ் இருக்கை
நான்மு கப்படை பழுதுபட் டோடலும் நகைத்து
வான்மு கத்தவர் ஆர்த்தனர் அதுகண்டு மைந்தன்
சூன்மு கக்கொண்டல் மேனியன் பெரும்படை தொடுத்தான். - 106
983 - ஊழி நாளினும் முடிகிலா தவன்மகன் உந்தும்
ஆழி யான்படை ஆண்டுமால் உருவமாய் அமைந்து
கேழில் ஐம்படை தாங்கிமா யத்தொடுங் கெழுமி
வாழி நந்திதன் படையெதிர் மலைந்தது மன்னோ. - 107
984 - நார ணன்படை நந்திதன் படைக்கெதிர் நணுகிப்
போரி யற்றியே நிற்புழி அதுகண்டு புனிதன்
சூர ரித்திறல் சிந்திடச் சிம்புளாய்த் தோன்றும்
வீர பத்திரப் படையினைத் தொழுதனன் விடுத்தான். - 108
985 - ஏய தாகிய வீரபத் திரப்படை எழுந்து
போய காலையின் நந்திதன் படையெதிர் பொருத
மாய வன்படை தொலைந்தது மதியொடு திகழ்மீன்
ஆயி ரங்கதி ரோன்வரக் கரந்தவா றதுபோல். - 109
986 - செங்கண் நாயகன் படைதொலைந் திடுதலுந் தெரிவான்
அங்கண் ஆய்வுறா இமைப்பினில் அகிலமும் அழிக்கும்
எங்கள் நாயகன் படையினைத் தூண்டுதற் கெடுத்தான்
வெங்கண் ஆயிரங் கதிரினைச் செயிர்த்திடும் வெய்யோன். - 110
987 - எஞ்சல் இல்லதோர் எம்பிரான் தொல்படை எடுத்து
மஞ்ச னங்கந்தந் தூபினை மணிவிளக் கமுதம்
நெஞ்சி னிற்கடி துய்த்தனன் பூசனை நிரப்பி
விஞ்சும் அன்பினால் வழுத்தியே தொழுதனன் விடுத்தான். - 111
988 - தாதை யாயவன் படைக்கலம் விடுத்திடுந் தன்மை
காதன் மாமகன் கண்டனன் தானுமக் கணத்தில்
ஆதி நாயகன் படைதனை எடுத்தனன் அளியால்
போத நீடுதன் புந்தியால் அருச்சனை புரிந்தான். - 112
989 - வழிப டுந்தொழில் முற்றிய பின்னுற மதலை
அழித தன்மகன் விடுத்திடு படைக்குமா றாகி
விழுமி தாயிவண் மீளுதி யாலென வேண்டித்
தொழுதி யாவர்க்கும் மேலவன் படையினைத் தொடுத்தான். - 113
990 - தூயன் விட்டிடு சிவன்படை எழுதலுந் தொல்லைத்
தீயன் விட்டிடு பரன்படை யெதிர்ந்துநேர் சென்ற
தாய அப்படை இரண்டுமா றாகிய வழிக்கு
நாய கத்தனி உருத்திர வடிவமாய் நண்ணி. - 114
991 - ஊழிக் காலினை ஒருபுடை உமிழ்ந்தன உலவாச்
குழிப் பாய்புகை ஒருபுடை உமிழ்ந்தன தொலைக்கும்
பாழிப் பேரழல் ஒருபுடை உமிழ்ந்தன பலவாம்
ஆழித் தீவிடம் ஒருபுடை உமிழ்ந்தன அவையே. - 115
992 - கூளி மேலவர் தொகையினை அளித்தன கொடிதாங்
காளி மேலவர் தொகையினை அளித்தன கடுங்கண்
ஞாளி மேலவர் தொகையினை அளித்தன நவைதீர்
ஆளி மேலவர் தொகையினை அளித்தன அயலில். - 116
993 - பேயி னங்களை ஒருபுடை உமிழ்ந்தன பிறங்கி
மூய தொல்லிருள் ஒருபுடை உமிழ்ந்தன முழங்கு
மாயை தன்கணம் ஒருபுடை உமிழ்ந்தன மறலித்
தீயர் தங்குழு ஒருபுடை உமிழ்ந்தன செறிய. - 117
994 - எண்ட ருங்கடல் அளப்பில கான்றன எரிகால்
கொண்ட லின்தொகை அளப்பில கான்றன கொலைசெய்
சண்ட வெம்பணி அளப்பில கான்றன தபன
மண்ட லங்களோர் அளப்பில கான்றன மருங்கில். - 118
995 - அனந்த கோடியர் புட்கலை இறைவரை அளித்த
அனந்த கோடியர் கரிமுகத் தவர்தமை அளித்த
அனந்த கோடியர் அ£¤முகத் தவர்தமை அளித்த
அனந்த கோடியர் சிம்புள்மே னியர்தமை அளித்த. - 119
996 - ஏறு வெம்பரி வயப்புலி வல்லியம் யாளி
சீறு மால்கரி தேரொடு மானமேற் சேர்ந்து
மாறில் பல்படை சிந்தியே முனிந்துமேல் வருவான்
வேறு வேறெங்கும் உருத்திர கணங்களை விதித்த. - 120
997 - ஆர ணன்படை அளப்பில தந்தன ஐவர்
சார ணன்படை அளப்பில தந்தன தந்த
வார ணன்படை அளப்பில தந்தன வளத்தின்
கார ணன்படை அளப்பில தந்தன கடிதின். - 121
998 - வாயு வின்படை எண்ணில புரிந்தன மறலி
ஆய வன்படை எண்ணில புரிந்தன அளக்கர்
நாய கன்படை எண்ணில புரிந்தன நகைசேர்
தீய வன்படை எண்ணில புரிந்தன செறிய. - 122
999 - கற்பொ ழிந்தன ஞெகிழிகள் பொழிந்தன கணக்கில்
செற்பொ ழிந்தன கணிச்சிகள் பொழிந்தன திகிரி
எற்பொ ழிந்த சூலம்வேல் பொழிந்தன ஈண்டும்
விற்பொ ழிந்தன சரமழை பொழிந்தன விரைவில். - 123
1000 - வேறு
இம்முறை உருவ நல்கி எம்பிரான் படையி ரண்டும்
மைம்மலி கடலும் வானும் மாதிர வரைப்பும் பாரும்
கொம்மென விழுங்கி அண்ட கோளகை பிளந்து மேல்போய்த்
தம்மின்மா றாகி நின்று சமர்த்தொழில் புரிந்த அன்றே. - 124
1001 - வற்றிய அளக்கர் ஏழும் வறந்தன வான்றோய் கங்கை
முற்றிய புறத்தில் ஆழி முடிந்ததவ் வண்டத் தப்பால்
சுற்றிய பெருநீர் நீத்தம் தொலைந்தன ஆண்டை வைப்பில்
பற்றிய உயிர்கள் யாவும் பதைபதைத் திறந்த அம்மா. - 125
1002 - எரிந்தன நிலனும் வானும் இடிந்தன முடிந்து மேருப்
பொரிந்தன அடுவின் சூழல் பொடிந்தன இரவி தேர்கள்
நெரிந்தன அண்டம் யாவும் நிமிர்ந்தன புகையின் ஈட்டம்
கரிந்தன கிரிகள் ஏழும் கவிழ்ந்தன திசையில் யானை. - 126
1003 - அலைந்தன சூறை வெங்கால் அவிந்தன வடவைச் செந்தீக்
குலைந்தன பிலங்கள் ஏழும் குலுங்கின அண்டப் பித்தி
உலைந்தன உயிர்கள் யாவும் உடைந்தனர் தெரிந்த வானோர்
தொந்தன கமட நாகம் சுருண்டன புரண்ட மேகம். - 127
1004 - பூமகள் புவியின் மங்கை பொருமியே துளங்கி ஏங்கித்
தாமரைக் கண்ணன் தன்னைத் தழுவினர் இருவ ரோடு
நாமகள் வெருவி யோடி நான்முகற் புல்லிக் கொண்டாள்
காமனை இறுகப் புல்லி இரதியும் கலக்க முற்றாள். - 128
1005 - மற்றுள முனிவர் தேவர் மடந்தையர் தம்மைப் புல்லி
நிற்றலும் ஆற்றார் உய்யும் நெறியுமொன் றில்லா ராயும்
உற்றிடும் அச்சந் தன்னால் ஓடினா¢ வனத்தீச் சூழப்
பெற்றிடும் பறழ்வாய் கவ்விப் பெயர்ந்திடும் பிணாக்க ளேபோல். - 129
1006 - திண்டிடு பூத வீரர் தியங்கினர் இலக்க ரானோ£¢
மருண்டனர் துணைவர் தாமும் மயங்கினர் வீரற் சூழ்ந்தார்
புரண்டனர் அவுணர் யாரும் பொடிந்தன படாந்த தேர்கள்
உருண்டன களிறு மாவும் ஒருவனே அவுணன் நின்றான். - 130
1007 - ஆழிசூழ் மகேந்தி ரத்தில் அமர்தரும் அவுணர் முற்றுஞ்
சூழுமித் தீமை நோக்கித் துண்ணென வெருவி மாழ்கி
ஏழிரு திறத்த வான உலகங்க ளியாவும் மாயும்
ஊழிநாள் இதுகொ லோவென் றுலைந்தனர் குலைந்த மெய்யார். - 131
1008 - பேரொலி பிறந்த தண்டம் பிளந்தன வளைந்த சூறை
ஆரழல் பரவிற் றம்மா ஆதவன் விளிந்தான் நந்தம்
ஊருறை சனங்கள் யாவும் உலைந்தன புகுந்த தென்னோ
தேருதி£¢ என்று சூரன் ஒற்றரைத் தெரிய விட்டான். - 132
1009 - விட்டிடு கின்ற ஒற்றர் செல்லுமுன் விரைந்து போரில்
பட்டது தெரிந்து தூதர் ஒருசிலர் பனிக்கு நெஞ்சர்
நெட்டிரு விசும்பின் நீந்து நெறியினர் இறைவன்தன்னைக்
கிட்டினர் வணங்கி நின்றாங் கினையன கிளத்த லுற்றார். - 133
1010 - ஐயகேள் உனது மைந்தன் அலரிதன் பகைஞன் நென்னல்
எய்திய தூத னோடும் இருஞ்சமர் விளைத்துப் பின்னர்த்
தெய்வதப் படைகள் உய்த்துச் செகமெலாம் அழிக்கு மேலோன்
வெய்யதோர் படையைத் தூண்ட அவனுமப் படையை விட்டான். - 134
1011 - அப்படை இரண்டு மாகி அகிலமும் ஒருங்கே உண்ணும்
ஒப்பில்பல் லுருவம் எய்தி உருகெழு செலவிற் றாகித்
துப்புடன் அண்ட முற்றும் தொலைத்தமர் புரிந்த மாதோ
இப்பரி கணர்ந்த தென்றா£¢ இறையவன் வினவிச் சொல்வான். - 135
1012 - இரவியை முனிந்தோன் முக்கண் இறையவன் படையை யாரும்
வெருவர விடுத்து மின்னும் வென்றிலன் ஒற்றன் தன்னை
நெருநலில் சிறிய னாக நினைந்தனம் அவனை அந்தோ
உருவுகண் டௌ¢ளா தாற்றல் உணர்வதே யுணர்ச்சி என்றான். - 136
1013 - வெருவரும் இனைய பான்மை விளைந்திட எம்பி ரான்தன்
பொருவரும் படைகள் தம்மிற் பொருதன ஆடல் உன்னி
ஒருவரும் நிகர்கா ணாத ஊழியின் முதல்வன் தானே
இருபெரு வடிவ மாகி இருஞ்சமா¢ புரிந்த தேபோல். - 137
1014 - இவ்வகை சிறிது வேலை எந்தைதன் படைக்க லங்கள்
அவ்விரு வோருங் காண ஆடலால அமர தாற்றி
வெவ்வுரு வாகத் தம்பால் மேவர விதித்த எல்லாஞ்
செவ்விதின் மீட்டும் வல்லே திரும்பிய திறலோர் தம்பால். - 138
1015 - திரும்பிய படைகள் தங்கள் செய்கையால் திரிந்த அண்டம்
பெரும்புவி அகல்வான் நேமி பிலம்வரை பிறவுந் தொல்லை
வரம்புறு மாறு நல்கி மாற்றலர் பக்கம் அல்லா
அரும்பெறல் உயிர்கள் முற்றும் அருள்செய்து போன அன்றே. - 139
1016 - திண்டிறல் மொய்ம்பன் விட்ட சிவன்படை மீட லோடும்
அண்டலன் விடுத்த தொல்லைப் படையுமாங் கவனை நண்ணக்
கண்டனர் அமரர் ஆர்த்தார் கைதவன் இதினும் வெற்றி
கொண்டிலன் முடிவன் இன்னே குறைந்ததெம் மிடரும் என்றார். - 140
1017 - பாங்கரின் இபங்கள் காணான் பாய்பரித் தொகுதி காணான்
தாங்கெழில் தேர்கள் காணான் தானவப் படையுங் காணான்
ஆங்கவை முடியத் தானே ஆயின தன்மை கண்டான்
ஏங்கினன் அவுணன் மைந்தன் இரங்கிமற் றினைய சொல்வான். - 141
1018 - மூண்டொரு கணத்தின் எல்லாம் முடிப்பவன் படையும் நேர்போய்
மீண்டுள தென்னின் அம்மா விடுத்திட மேலொன் றுண்டோ
மாண்டன அனிக முற்றும் வறியனாய்த் தமியன் நின்றேன்
ஈண்டினிச் செய்வ தென்னென் றெண்ணியோர் சூழ்ச்சி கொண்டான். - 142
1019 - மாயத்தான் எய்தும் நிற்கின் மலைவதுஞ் செயலன் றென்னா
மாயத்தான் அருவங் கொண்டு வல்விரைந் தெழுந்து சென்று
காயத்தான் ஆகி நிற்பக் கைதவன் வெருவித் தோன்றாக்
காயத்தான் உடைந்தான் என்றே ஆர்த்தன கணங்க ளெல்லாம். - 143
1020 - விடலைவிண் ணெழுந்த காலை மேவலர் தொகையை எல்லாம்
முடிவுசெய் கென்று வஞ்ச முரட்படை அவுணன் தூண்டின்
அடுமது நமையும் என்னா அதற்குமுன் அளக்கர் ஆற்றைக்
கடிதினிற் கடந்தான் போலக் கதிரவன் கரந்து போனான். - 144
1021 - மைப்புயல் மேனித் தீயோன் மறைந்தது வள்ளல் காணா
இப்பகல் தானுங் கள்வன் இறந்திலன் இரிந்து வல்லே
தப்பினன் இனியான் செய்யத் தகுவதென் னுரைத்தி ரென்ன
ஒப்பருந் துணைவர் கேளா ஒருங்குடன் தொழுது கொல்வா£¢. - 145
1022 - வந்தெதிர் அவுணர் தானை மாண்டன தமியன் நின்றான்
சிந்தினன் கரந்து போனான் இனிவருந் திறலோர் இல்லை
அந்தியும் அணுகிற் றம்மா அனிகமு மியாமும் மீண்டு
கந்தனை இறைஞ்சிக் காலை வருவதே கடமைத் தென்றார். - 146
1023 - வேறு
இனிய தன்றுணைவர் இன்னன கூற
வினவி னோன்முருக வேள்அடி காணும்
நினைவு கொண்டிடலும் விண்ணிடை நின்ற
தினகரன் பகைஞன் இன்ன தெரிந்தான். - 147
1024 - முன்னை வைகலின் முரிந்தனன் என்றே
பன்னு மோர்வசை பரந்ததும் அன்றிப்
பின்னும் இப்பகல் பிழைத்தனன் என்றால்
என்னை யாவர்களும் எள்ளுவர் மாதோ. - 148
1025 - தொக்க போரில்வெரு வித்தொலை வோரை
தக்கதோர் துணைவர் தந்தையர் தாயர்
மக்கள் பெண்டிரும் மறப்பர்கள் என்னின்
மிக்குளார் இகழ்தல் வேண்டுவ தன்றே. - 149
1026 - இன்று நென்னலின் இரிந்துளன் என்றால்
வென்றி மன்எனை வெகுண்டு துறக்குந்
துன்று பல்கதி ரினைச்சுளி தொல்சீர்
பொன்றும் எந்தைபுக ழுந்தொலை வாமால். - 150
1027 - யாதொர் துன்னலர் எதிர்ந்திடின் இன்று
காதலே வலிக டந்திடு சூழ்ச்சி
நீதி அன்றதுவும் நேர்ந்தில தென்னில்
சாதலே தகுதி சாயந்திடல் நன்றோ. - 151
1028 - வருந்தி நின்றெதிர் மலைந்தனன் இன்றும்
இரிந்து ளான்இவன் எனும்பழி கோடல்
பொருந்தல் அன்றுபுணர் வென்னினும் ஆற்றி
விரைந்து மாற்றலரை வென்றிடல் வேண்டும். - 152
1029 - முன்னம் நின்றொரு முரட்படை தன்னை
இன்னல் எய்தும்வகை ஏவுதும் என்னின்
அன்ன தற்கெதிர் அடும்படை தூண்டிச்
சின்ன மாகவது சிந்துவன் வீரன். - 153
1030 - இறந்த னன்பொரு திரிந்தன னென்னாப்
பறந்த லைச்செறுநர் பன்னுற இன்னே
மறைந்து நின்றொரு வயப்படை தூண்டிச்
சிறந்த வென்றிகொடு சென்றிடல் வேண்டும். - 154
1031 - தெய்வ தப்படை செலுத்துவன் என்னின்
அவ்வ னைத்தும்அம ராற்றலர் தம்பாற்
செவ்வி துற்றுயிர் செகுத்திட லின்றே
வெவ்வு ருக்கள்கொடு மீளுவ தல்லால். - 155
1032 - பண்ண வப்படை படைத்திடு கோலம்
எண்ண லன்தெரியின் ஏற்றன தூண்டித்
துண்ணெ னத்தொலைவு சூழ்ந்திடும் யானும்
விண்ண கத்துறல் வௌ¤ப்படு மாதோ. - 156
1033 - வௌ¤ப்படிற் செறுநர் விண்ணினும் வந்தே
வளைத்திகற் புரிவர் மாறமர் செய்தே
இளைத்தனன் பொரவும் இன்னினி *ஒல்லா
தொளித்து முற்பகலின் ஓடரி தாமால்.
( * பா-ம் - ஏலா.) - 157
1034 - ஏயெனச் செறுநர் ஈண்டுழி நண்ணி
ஆய தொல்லுணர் வனைத்தையும் வீட்டி
வீயும் ஈற்றினை விளைத்திடு கின்ற
மாய மாப்படை விடுத்திடல் மாட்சி. - 158
1035 - என்று சிந்தைதனில் இன்னன உன்னி
அன்று மாயவள் அளித்திடு கின்ற
வன்றிறற் படையை வல்லை எடுத்தே
புன்றொழிற் குரிசில் பூசனை செய்தான். - 159
1036 - நெறிகொள் முப்புலனில் நெஞ்சினில் யாரும்
அறிவரும் பரிசின் அண்டலர் தம்பாற்
குறுகிமெய் யுணர்வு கொண்டுயிர் மாற்றி
எறிபுனற் கடலுள் என்று விடுத்தான். - 160
1037 - விடுதலுங் கொடிய வெம்படை தானவந்¢
தடையும் வண்ணமறி தற்கரி தாகிக்
கடிது பாரிடை கலந்து கணத்தின்
படையை எய்தியது பாவம தென்ன. - 161
1038 - இருங்க ணத்தரை யிலக்கரை ஔ¢வாள்
மருங்கு சேர்த்திய வயத்துணை வோரை
நெருங்கு தார்ப்புய நெடுந்திற லோனை
ஒருங்கு சூழ்ந்துணர் வொழித்தது மன்னோ. - 162
1039 - ஆன்ற பொன்நகரில் அண்டர்கள் அஞ்ச
ஊன்றும் வில்லிடை உறங்கிய மால்போல்
தோன்று மாயைபடை தொல்லறி வுண்ண
மான்றி யாவரும் மறிந்து கிடந்தா£¢. - 163
1040 - மறிந்து ளார்தமது மன்னுயிர் வவ்விச்
சிறந்த தன்வலி செயற்கரி தாக
அறிந்து மாயைபடை ஆகுல மூழ்கி
எறிந்து நேமியிட எண்ணிய தன்றே. - 164
1041 - ஓல மிட்டுலக முட்கிட ஊழிக்
காலின் வெவ்வுருவு கைக்கொடு மாயக்
கோல வெம்படை கொடுந்தொழில் கொண்ட
ஆல காலமென ஆன்றுள தன்றே. - 165
1042 - வேறு
வௌ¢ளமா யிரம தென்னும் வியனுரை படைத்த பூத
மள்ளரைத் தலைவர் தம்மை வயங்கெழு துணையி னோரை
நள்ளலர்க் கடந்த துப்பின் நம்பியை உம்பர் ஆற்றால்
பொள்ளென எடுத்து படைக்கலம் போயிற் றம்மா. - 166
1043 - போயது சூரன் மைந்தன் புந்தியிற் கதிமேற் கொண்டு
மாயிரு நேமி ஆறும் வல்லையில் தப்பி அப்பால்
தூயதெண் புனலாய் ஆன்ற தொல்கடல் அழுவம் நண்ணி
ஆயவர் தொகையை இட்டே அகன்றிடா தோம்பிற் றன்றே. - 167
1044 - நின்றிடு சூரன் மைந்தன் நிலைமைமற் றிதனை நோக்கிப்
பொன்றினன் வீர வாகு பூதரும் பிறரும் வீந்தார்
குன்றம தன்றால் மீளக் குரைபுனல் வேலை ஆழ்ந்தார்
நன்றுநஞ் சூழ்ச்சி என்னா நகைஎயி றிலங்க நக்கான். - 168
1045 - அண்டருங் களிப்பின் மேலோன் அவ்விடை அகன்று வல்லை
விண்டொடர் நெறியிற் சென்று வியன்மகேந் திரத்தின் எய்தி
எண்டிசை உலகம் போற்ற இறைபுரி தாதை தன்னைக்
கண்டனன் இறைஞ்சி நின்றாங் கினையன கழற லுற்றான். - 169
1046 - இன்றியான் சென்று பல்வே றிருஞ்சமா¢ இயற்றிப் பின்னர்
வன்றொழில் புரிந்தவீர வாகுவை அவன்பா லோரை
அன்றியும் பூத வௌ¢ளை மாயிரந் தன்னை யெல்லாம்
வென்றுயிர் குடித்தி யாக்கை வியன்புனற் கடலுள் உய்த்தேன். - 170
1047 - சிறிதுநீ கவலை கொள்ளேல் சேனையும் யானும ஏகி
மறிகட லெறியுங் கால்போல் வளைந்துபா சறையைச் சிந்தி
அறுமுகன் தனையும் வென்றே அரியய னோடும் விண்ணோர்
இறைவனைப் பற்றி நாளை ஈண்டுதந் திடுவன் என்றான். - 171
1048 - வேறு
என்னும் வேலையில் எழுந்தன உவகையாப் புடைய
பொன்னின் அங்கத மூட்டற நிமிர்ந்தன புயங்கள்
மின்னு மாமணிக் கடகங்கள் நெரிந்து வீழ்கின்ற
துன்னு மாமயிர் பொடித்தன முறுவல் தோன்றியதே. - 172
1049 - எழுந்து நின்றிடும் இரவிதன் பகைஞனை இமைப்பில்
அழுந்த மார்புறத் தழீஇக்கொடு மடங்லே றாற்றுஞ்
செழுந்த னிப்பெருந் தவிசிடை ஏற்றி அச்சேயைக்
குழந்தை நாளெனத் தன்னயல் இருத்தினன் கொண்டான். - 173
1050 - தந்தை யாயினோர் இனிதுவீற் றிருப்பதும் தமது
மைந்தர் தங்குடி பரித்தபின் அன்றிமற் றுண்டோ
எந்தை வந்துநந் தொன்முறை போற்றலால் யானுஞ்
சிந்தை தன்னிலோர் எண்ணமும் இன்றியே சிறந்தேன். - 174
1051 - அன்று நோற்றதும் பறபகல் உண்டரோ அதற்காக்
கொன்றை வேணியன் கொடுத்தனன் என்பது கொள்ளாச்
சென்ற வார்த்தைகள் நிற்கஇவ் வரசும்இத் திருவும்
இன்று நீதரப் பெற்றனன் ஐயயான் என்றான். - 175
1052 - என்று பற்பல நயமொழி கூறிமுன் னிட்ட
வென்றி சேர்அணி மாற்றியே புதுவதா விளித்துத்
துன்று பொன்முடி ஆதியா வார்கழற் றுணையும்
நன்று தான்புனைந் தொருமொழி பின்னரும் நவில்வான். - 176
1053 - முன்னம் நீசொற்ற தன்மையே மூவிரு முகத்தோன்
தன்னை வென்றுவெஞ் சாரதப் படையினைத் தடிந்து
பின்னர் நின்றிடும் அமரரைச் சிறையிடைப் பிணித்தே
என்னு டைப்பகை முடிக்குதி காலையே என்றான். - 177
1054 - என்ன அன்னது செய்குவன் அத்தஎன் றிசைப்ப
மன்னர் மன்னவன் சமரிடை நொந்தனை மைந்த
பொன்னு லாயநின் திருமனைக் கேகெனப் புகலப்
பன்னெ டுங்கதிர் மாற்றலன் விடைகொண்டு படர்ந்தான். - 178
1055 - சூழி யானைதேர் வருபரி அவுணர்கள் சுற்ற
நாழி யொன்றின்முன் சென்றுதன் கோநகர் நண்ணி
வாழ்வின் வைகினன் இதுநிற்க வன்புனற் கடலுள்
ஆழும் வீரர்கள் தேறியே எழுந்தவா றறைவாம். - 179
1056 - வடபெ ருங்கிரி சூழபவன் தொல்பகை மாயப்
படைவி டுத்ததும் பூதரும் துணைவர்கள் பலரும்
தொடையல் வாகுடை வீரனும் மயக்குறத் தூநீர்க்
கடலுள் இட்டதும் ஆங்ஙனஞ் சுரரெலாம் கண்டார். - 180
1057 - அண்டர் அங்கது நோக்கியே வெய்துயி£¢த் தரந்தை
கொண்டு ளம்பதைத் தாவலித் தரற்றிமெய் குலைந்து
கண்டு ளித்திடக் கலுழ்ந்துநா வுலர்ந்துகைம் மறித்து
விண்டி டும்படி முகம்புடைத் தலமந்து வியர்ந்தார். - 181
1058 - இன்னல் இத்திற மாகியே அமரர்கள் இரிந்து
சென்னி யாறுடைப் பண்ணவற் குரைத்திடச் சென்றார்
அன்ன தாகிய பரிசெலாம் நாடியே அவர்க்கு
முன்னம் ஓடினன் முறைதெரி நாரத முனிவன். - 182
1059 - அம்பெ னும்படி கால்விசை கொண்டுபோய் அறிவன்
இம்ப ராகிய பாசறைக் கண்ணுறும் எந்தை
செம்ப தங்களை வணங்கிநின் றஞ்சலி செய்தே
உம்பர் கோமகன் தன்மனம் துளங்குற உரைப்பான். - 183
1060 - சூரன் மாமகன் கரந்துமா யப்படை துரந்து
வீர வாகுவும் துணைவரும் வெங்கணத் தவரும்
ஆரும் மால்கொள வீட்டியே அன்னதால் அவரை
வாரி நீர்க்கடல் உய்த்தனன் சூழச்சியின் வலியால். - 184
1061 - என்று நாதர முனிவரன் புகறலும் இமையோர்
சென்று சென்றுவேள் பதங்களை இறைஞ்சியே திருமுன்
நின்று வீரர்கள் அழிந்திடு செயல்முறை நிகழ்த்த
வென்றி வேலினை நோக்கியே எம்பிரான் விளம்பும். - 185
1062 - கங்கை அன்னதோர் வாலிதா கியபுனற் கடற்போய்
அங்கண் வைகிய மாயமாப் படையினை அழித்து
வெங்கண் வீரர்மால் அகற்றியே அனையவர் விரைவில்
இங்கு வந்திடத் தந்துநீ செல்கென இசைத்தான். - 186
1063 - செய்ய வேலினுக் கின்னதோர் பரிசினைச் செப்பி
ஐயன் அவ்விடை விடுத்தலும் நன்றென அகன்று
வெய்ய தீங்கதிர் ஆயிர கோடியின் விரிந்து
வைய மேலிருள் முழுதுண்டு வல்விரைந் ததுவே. - 187
1064 - அரவு மிழ்ந்தது கொடுவிடம் உமிழ்ந்ததால் அடுகூற்
றுருவு மிழ்ந்தது செல்லினம் உமிழ்ந்ததெவ் வுலகும்
வெருவு பல்படைக் கலங்களும் உமிழ்ந்தது மிகவும்
கருநெ டும்புகை உமிழ்ந்ததங் குமிழ்ந்தது கனலே. - 188
1065 - மின்னல் பட்டன முகிலிருள் பட்டன விசும்பில்
துன்னல் பட்டன காரிருள் பட்டன துன்னார்
இன்னல் பட்டிடு மெய்யிருள் பட்டன வெரிமுன்
பன்னல் பட்டன நேமிசூழ் தனியிருட படலம். - 189
1066 - எரிக டுங்கிய தனிலமும் நடுங்கிய தெண்பாற்
கரிந டுங்கிய அளக்கரு நடுங்கிய கனக
கிரிந டுங்கிய தரவினம் நடுங்கிய கிளர்தேர்
அரிந டுங்கிய திந்துவும் நடுங்கிய தம்மா. - 190
1067 - அங்கி தன்படை கூற்றுவன் தன்படை அனிலன்
துங்க வெம்படை அளக்கர்கோன் தன்படை சோமன்
செங்கை வெம்படை மகபதி பெரும்படை திருமால்
பங்க யன்படை யாவையும் பொழுதுடன் படர. - 191
1068 - அடிகள் விட்டிடும் வேற்படை எனப்படும் அலரி
கடிது சேறலும் வானவர் வதனமாங் கமலம்
நெடிது மாமகிழ் வெயதியே மலர்ந்தன நெறிதீர்
கொடிய தானவா¢ முகமெனுங் கருவிளங் குவிய. - 192
1069 - இரிந்த தானவர் நாளையாம இறத்துமென் றிருக்கை
பொருந்தி மாதரை முயங்கினர் கங்குலும் புலர
விரைந்து ஞாயிறு வந்ததென் றேங்கமின் னாரைப்
பிரிந்த வானவர் யாவருஞ் சிறந்தனர் பெரிதும். - 193
1070 - இத்தி றத்தினால் அயிற்படை முப்புரத் திறைவன்
உய்த்த தீநகை போலவே வல்விரைந் தோடி
முத்தி றத்திரு நேமியும பிற்பட முந்திச்
சுத்த நீர்க்கடல் புகுந்தது விண்ணுளோர் துதிப்ப. - 194
1071 - செய்ய வேற்படை ஆயிடை புகுதலுந் தெரிந்து
வெய்ய மாயவள் படைக்கலம் ஆற்றவும் வெருவி
மையல் வீரரை நீங்கியே தொலைந்துபோய் மறிந்து
மொய்யி ழந்தது தன்செயல் இழந்தது முடிந்ததே. - 195
1072 - ஆய காலையில் எந்தைதன் படைக்கெதிர் அடைந்து
தூய தெண்கடல் இறையவன் வெருவியே தொழுது
நேய நீர்மையான் மும்முறை வணங்கிமுன் நின்று
காய முற்றவும் வியா¢ப்பெழ ஒருமொழி கழறும். - 196
1073 - வேறு
அமைந்த மில்வரம் அடைந்திடு சூரன்
மைந்தன் மாயவள் வயப்படை தூண்டி
நந்தம் வீரர்கண நாதரை யெல்லாம்
புந்தி மேன்மயல் புணர்த்தினன் அம்மா. - 197
1074 - முன்னு ணர்ச்சிமுடி வோர்தமை மற்றென்
றன்னி டத்திலிடு தன்மை புரிந்தான்
அன்ன தத்துணையில் அப்பணி ஆற்றி
என்னி டத்தினில் இருந்துள தன்றே. - 198
1075 - இருந்த மாயைபடை எம்பெரு மான்நீ
மருந்து போல்இவண் வழிப்படல் காணூஉ
அரந்தை எய்திஅடல் வீரரை நீங்கி
முரிந்து வீழ்ந்திவண் முடிந்தது மன்னோ. - 199
1076 - தொடையல் வாகைபுனை சூரருள் மைந்தன்
விடவ ரும்படையின் வெவ்வலி சிந்தி
அடவும் வன்மையில் அனங்கவ ராலே
இடர்ப டுஞ்சிறியன் என்செய்வன் அம்மா. - 200
1077 - வெந்தி றற்பகைஞர் மேல்அமர் செய்ய
வந்த வீரரும் மறிந்தனர் வற்றார்
எந்த வேலையெழு வா£¢இவர் என்றே
புந்தி நோய்கொடு புலம்பினன் யானும். - 201
1078 - முறுவ லாற்புரம் முடித்தவன் நல்கும்
அறுமு கேசன்அசு ரத்தொகை யெல்லாம்
இறையின் மாற்றுமமர் எண்ணிய தாடல்
திறம தென்றுநனி சிந்தனை செய்தேன். - 202
1079 - வள்ள லாயிடை வதிந்து கணத்தின்
வௌ¢ள மோடுவிடு வீரர்கள் தம்மை
நள்ள லான்மகன் நலிந்திடல் அன்னாற்
குள்ள மாங்கொலெ உன்னி அயர்ந்தேன். - 203
1080 - ஆதி மைந்தன்அசு ரத்தொகை தன்னைக்
காதின் உய்குவ னெனக்கரு துற்ற
பேதை யேன்புரி பிழைப்பிவண் உண்டோ
ஏதும் இல்லைமுனி யேல்எனை யென்றான். - 204
1081 - வாழு நேமியிறை மற்றிது கூறித்
தாழும் எல்லைதள ரேல்இனி யென்னா
ஊழி யின்முதல்வன் உய்த்திடும் ஔ¢வேல்
ஆழு நீரரை அடைந்தது நண்ணி. - 205
1082 - வேறு
அடைதரு கின்ற முன்னர் அவருணர் வுண்ட மாயப்
படையது நீங்கிற் றாகப் பதைபதைத் துயிர்த்து மெல்ல
மடிதுயில் அகன்று தொல்லை வாலறி வொருங்கு கூடக்
கடிதினில் எழுந்தார் அங்கண் உதித்திடு கதிர்க ளென்ன. - 206
1083 - புழையுறும் எயிற்றுப் பாந்தள் பொள்ளெனச் செயிர்த்துக் கான்ற
அழல்படு விடமீச் செல்ல அலமந்து வியர்த்து மாழ்கிக்
கழிதுயி லடைந்தோர் வல்லோன் காட்சியால் அதுமீண் டேக
எழுவது போல அன்னோர் யாவரும் எழுத லுற்றார். - 207
1084 - சாரதக் கணத்து ளோருந் தலைவரும் இலக்கத் தோரும்
யாரினும் வலிய ரான எண்மரும் எவர்க்கும் மேலாம்
வீரனும் எழுந்து வேலை மீமிசைப் பெயர்ந்து செவ்வேள்
சீரடி மனங்கொண் டேத்தித் தொழுதனர் சிறந்த அன்பால். - 208
1085 - வீடின அவுணன் மாயை விளிந்தன பவத்தின் ஈட்டம்
பாடின சுருதி முற்றும் படிமகள் உவகை பூத்தாள்
ஆடிய தறத்தின் தெய்வம் ஆர்த்தன புவனம் யாவும்
நாடிய முனிவர் தேவர் நறைமலர் மாரி தூர்த்தார். - 209
1086 - அன்னதோர் அமைதி தன்னில் ஆறுமா முகத்து வள்ளல்
மின்னிவர் குடுமிச செவ்வேல் விண்ணிடை வருதல் காணூஉப்
பன்னரும் உவகை பொங்கப் பன்முறை பணிந்து போற்றிச்
சென்னியில் தொழுத கையார் எதிர்கொடு சென்று சூழ்ந்தார். - 210
1087 - சூழ்ந்திடு கின்ற காலைச் சூர்மகன் மாயை தன்னால்
தாழ்ந்துணர் வழிந்த வாறும் தடம்புனற் புணரி உய்ப்ப
வீழ்ந்ததும் ஐயன் வேலால் மீண்டதும் பிறவு மெல்லாம்
ஆழ்ந்ததொல் லறிவால் தேறி அறிஞர்க்கும் அறிஞன் சொல்வான். - 211
1088 - அந்தமில் ஔ¤யின் சீரால அறுமுகம் படைத்த பண்பால்
எந்தைகண் நின்றும் வந்த இயற்கையாற் சத்தி யாம்பேர்
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம். - 212
1089 - நண்ணலன் பிணித்த மாயம் நலிந்திட யாங்கள் எல்லாம்
துண்ணென அறிவின் றாகித் தொல்புனற் கடலுட் பட்டேம்
எண்ணரும் படைகட் கெல்லாம் இறைவநீ போந்த வாற்றால்
உண்ணிகழ் உணர்ச்சி தோன்ற உய்ந்தனம் உயிரும் பெற்றேம். - 213
1090 - குன்றிடை எம்மை வீட்டிக் கொடியவன் புணர்ப்புச் செய்த
அன்றும்வந் துணர்வு நல்கி அளித்தனை அதுவும் *அல்லால்
இன்றும்வந் தெம்மை ஆண்டாய் ஆதலின் யாங்கள் உய்ந்தேம்
உன்றனக் குதவுங் கைம்மா றுண்டுகொல் உலகத் தென்றான்.
( * பா-ம் - அல்லாது.) - 214
1091 - தூயவன் இனைய மாற்றஞ் சொற்றலும் அயில்வேல் கேளா
நீயிர்கள் விளிந்த தன்மை நேடியே நிமலன் என்னை
ஏயினன் அதனால் வந்தேன் யான்வருந் தன்மை நாடி
மாயம திறந்த தங்கண் வருதிரென் றுரைத்த தன்றே. - 215
1092 - நன்றெனத் தொழுது வீரன் நகையொளி முகத்த னாகிப்
பின்றொடர் துணையி னோரும் பெருங்கணத் தவருஞ் சூழச்
சென்றனன் அனைய காலைச் சிறந்தவேற் படைமுன் னேகி
வென்றிகொள் குமரன் செங்கை மீமிசை அமர்ந்த தன்றே. - 216
-------
6. நகர் புகு படலம் (1093-1165)
1093 - முன்னுறச் செவ்வேல் ஏக மூவிரு முகத்து வள்ளல்
தன்னடிக் கமல முன்னித் தரங்கநீர் உவரி வைப்பின்
மின்னெனக் கடிது போந்து விறன்முகு தடந்தோள் அண்ணல்
தொன்னிலைத் திருவின் மேவுஞ் சூரன்மு தூரைக் கண்டான். - 1
1094 - கண்டலும் எயிற்றின் மாலை கல்லெனக் கலிப்பக் கண்கள்
மண்டுதீப் பொறிகள் கால வாய்புகை உமிழ நாசித்
துண்டம துயிர்ப்ப மார்பந் துண்ணென வியர்ப்புத் தோன்றத்
திண்டிறல் மொய்ம்பின் மேலோன் செயிர்த்திவை புகல லுற்றான். - 2
1095 - வெஞ்சமர்க் காற்றல் இன்னி வெருவிப்போய் விண்ணின் நின்று
வஞ்சனை புரிந்து நம்மை மாயத்தால் வென்று மீண்டும்
உஞ்சனன் இருந்த கள்வன் உயிர்குடித் தன்றி ஐயன்
செஞ்சரண் அதனைக் காணச் செலலுவ தில்லை யானே. - 3
1096 - நன்னகர் அழிப்பன் இன்று நண்ணலன் மதலை நேரின்
அன்னவன் தனையும் யானே அடுவனால் அடுகி லேனேற்
பின்னுயிர் வாழ்க்கை வேண்டேன் யான்பிறந் தேனும் அல்லேன்
என்னொரு சிலையும் யானும் எரியிடைப் புகுவ னென்றான். - 4
1097 - சூளிது முதல்வன் கூறத் துணைவரும் பிறருங் கேளா
வாளரி யனைய வீர அடையலர்க் கழிந்தேம் வாளா
மீளுதல் பழிய தாகும் வென்றிகொண் டல்லால் எந்தை
தாளிணை காண்ப துண்டோ சரதமே இதுமற் றென்றார். - 5
1098 - நும்மனத் துணிவு நன்றால் நொறில்படைக் கணத்தோ டேகி
இம்மெனச் செறுநர் மூதூர் எரியினுக் குதவி நேர்ந்தார்
தம்மையட் டவுணன் மைந்தன் தன்னையுந் தடிதும் யாரும்
வம்மெனப் புகன்றான் என்ப வாகையம் புயத்து வள்ளல். - 6
1099 - ஆரியன் தனது மாற்றம் அனைவரும் வியந்து செல்ல
ஓரிமை யொடுங்கும் முன்னம் உவா¤யின் நடுவ ணான
வீரமா மகேந்தி ரத்தின் மேற்றிசை வாயில் போந்தான்
பாரிடக் கணங்கள் ஆர்த்த பரவகைள் அழிந்த தேபோல். - 7
1100 - ஆர்த்தன அவுணர் கேளா அற்புதம் நிகழ வான்போய்ப்
பார்த்தனர் சிலவர் உள்ளம் பதைத்தனர் சிலவர் யாக்கை
வேர்த்தனர் சிலவர் ஈது மேவலர் துழனி எனனாச்
சீர்த்தனர் சிலவர் அம்மா செருவெனக் கிளருந் தோளார். - 8
1101 - வேறு
வேழத் தின்தொகை வெம்பரி வெய்யோர்
ஆழித் தேர்கள் அளக்கரின் ஈண்ட
ஊழித் தீச்செறி உற்றன வேபோற்
பாழித் தீபிகை பற்பல மல்க. - 9
1102 - வானா ருங்குட வாயதலின் வைகி
யானா தென்றும் அளித்திடு கின்றோன்
மேனாள் மாயை விதித்திடு மைந்தன்
ஊனார் செம்புனல் உண்டுமிழ் வேலோன். - 10
1103 - அரணங் கொண்டதன் னாணை கடந்த
முரணுங் கூற்றுவன் முத்தலை வேலும்
வருணன் பாசமும் வன்மையின் வாங்கி
விரணங் கொண்டு வியன்சிறை செய்தோன். - 11
1104 - விண்ணில் தீச்சுடர் போன்மிளிர் மெய்யான்
வண்ணப் பல்பொறி மாமுகம் உள்ளான்
அண்ணல் சீயவ ரித்தவி சின்கண்
நண்ணுற் றான்அடல் நஞ்சினும் வெய்யோன். - 12
1105 - சேணார் மாமுகில் செல்லொடு சிந்த
மாணார் பூத வயப்படை யார்த்தே
ஏணார் வீரரொ டெய்திய தன்மை
காணா நின்று கனன்றெழ லுற்றான். - 13
1106 - தன்கண் நின்றிடு தானைக ளெல்லாம்
முன்கண் சென்றிட மொய்ம்புடன் ஏகிப்
புன்கட் டீயவன் ஏற்றெதிர் புக்கான்
வன்கட் பூதர்கள் வந்து மலைந்தார். - 14
1107 - வில்லுண் வாளிகள் வேல்மழு நேமி
அல்லுண் மெய்யவு ணப்படை தூ£¢த்த
கல்லும் மாமர முங்கதை யாவுஞ்
செல்லென் றுய்த்தனர் சீர்கெழு பூதர். - 15
1108 - முட்டா வெஞ்சினம் மூண்டிட இன்னோர்
கிட்டா நின்று கிளர்ந்தமர் ஆற்றப்
பட்டார் தானவர் பாரிடர் பல்லோர்
நெட்டா றொத்து நிமிர்ந்தது சோரி. - 16
1109 - கண்டார் அன்னது காவலர் சீற்றம்
கொண்டார் தாமெதிர் கொண்டமர் செய்ய
அண்டார் நின்றிலர் ஆவியு லந்தே
விண்டார் ஓர்சிலர் மீண்டுதொ லைந்தார். - 17
1110 - இடித்தார் தேரினை எற்றினர் மாவை
அடித்தார் தந்திக ளானவை சிந்த
முடித்தார் ஒன்னலர் மூளையின் நின்றே
நடித்தார் பூதர்கள் நாரதர் பாட. - 18
1111 - முன்சூழ் தானை முடிந்தது கண்டான்
மன்சூழ் வெம்புலி மாமுக வீரன்
என்சூழ் விங்கினி யென்று நினைந்தோர்
கொன்சூ லப்படை கொண்டு நடந்தான். - 19
1112 - நடக்கின் றானை நலிந்து கணக்கில்
அடக்கின் றாமென ஆர்த்தெதிர் நண்ணிக்
கடக்குன் றங்கள் கணிப்பில வைகும்
தடக்குன் றம்பல சாரதர் உய்த்தா£¢. - 20
1113 - சாலம் கொண்டிடு சாரதர் உய்த்த
நீலம் கொண்ட நெடுங்கிரி யாவும்
சூலம் கொண்டுப· றுண்டம தாக்கி
ஆலம் கொண் அளக்கரின் ஆர்த்தான். - 21
1114 - அந்நேர் கொண்டவன் ஆற்றலை நோக்கி
என்னே நிற்பதி யாமிவண் என்னா
முன்னே நின்ற முரண்கெழு சிங்கன்
மின்னே யென்ன விரைந்தெதிர் சென்றான். - 22
1115 - வேறு
வையமிகு பூதரின் மடங்கற் பேரினோன்
வெயிலுமிழ் முத்தலை வேலொன் றேந்தியே
குயவரி முகமுடைக் கொடியன் முன்புயோப்ப்
புயலினம் இரிந்திடத் தெழித்துப் பொங்கினான். - 23
1116 - அத்துணை வேலையில் அவுணர் காவலன்
முத்தலை வேலினான் முந்துசிங் கன்மேற்
குத்தினன் அனையனும் கொடியன் மார்பிடைக்
கைத்தலம் இருந்ததன் கழுமுள் ஓச்சினான். - 24
1117 - செறித்திடு சூலவேல் செருவின் மேலவர்
புறத்தினில் போயின பொழிந்த செம்புனல்
நெறித்தரு பகலவன் நின்ற குன்றினும்
எறித்தரும் இளங்கதிர் என்னச் சென்றதே. - 25
1118 - ஆங்கவர் முறைமுறை அயில்கொள் சூலவேல்
வாங்கினர் இடந்தோறும் மற்றும் ஓச்சுவர்
ஈங்கிது போலநின் றிகலிப் போர்செய்தார்
நீங்கருந் தளைபடு நெறியர் என்னவே. - 26
1119 - அற்றது காலையில் அனையர் கைத்தலம்
பற்றிய முத்தலைப் படைக ளானவை
இற்றன ஒருதலை இரண்டும் வீழ்தலும்
மற்றொழில் புரிந்தனர் நிகரில் வன்மையார். - 27
1120 - புலிமுகன் அவ்வழிப் புரிந்து மற்றொழில்
வலியினை இழந்தனன் மையல் எய்தினான்
தலமிசை வீழ்தலும் தனது தாள்கொடே
உலமுறழ் தோளினன் உதைத்து ருட்டினான். - 28
1121 - ஒலிகழல் மேலவன் உதைத்த வன்மையால்
அலமரு தீயவன் ஆவி நீங்கினான்
மலர்மழை தூவினர் வானு ளோர்அ£¤
புலிதனை வெல்வது புதுமைப் பாலதோ. - 29
1122 - சூர்கொளும் முத்தலைச் சூல வேல்கொடு
நேர்கொளும் புலிமுகன் இறந்த நீர்மைகண்
டார்கலி யாமெனப் பூதர் ஆர்த்தனர்
வார்கழல் வீரனும் மகிழ்ந்து நோக்கினான். - 30
1123 - கழிந்தன தானைகள் காவல் வீரனும்
அழிந்தனன் மேற்றிசை அரணம் வீட்டியே
செழுந்திரு நகரிடைச் சேறும் யாமென
மொழிந்தனர் பூதர்கள் முரணின் முந்தினார். - 31
1124 - முந்திய பூதர்கள் முனிந்து மேற்றிசை
உந்திய புரிசையை ஒல்லை சேர்வுறாத்
தந்தம தடிகளால் தள்ளிப் பொள்ளெனச்
சிந்தினர் பறித்தனர் சிகரி தன்னையும். - 32
1125 - பொலம்படு சிகரியைப் பறித்துப் பூதர்கள்
நலம்படு மகேந்திர நகருள் வீசியே
உலம்பினர் அவுணர்கள் உலைந்து சிந்தினார்
கலம்பகிர் வுற்றிடக் கடலுற் றார்கள்போல். - 33
1126 - முகுந்தனை வென்றிடு முரண்கொள் பூதர்கள்
புகுந்தனர் மகேந்திர புரத்து ஞௌ¢ளலில்
தொகுந்தொகும் அவுணரைத் தொலைத்துச் சென்றனர்
தகுந்தகும் இவர்க்கென அமரர் சாற்றவே. - 34
1127 - நீக்கமில் மாளிகை நிரைகள் யாவையும்
மேக்குயர் பூதர்கள் விரைந்து தம்பதத்
தாக்கினில் அழித்தனர் தவத்தின் மேலவர்
வாக்கினில் அகற்றிய வண்ண மேயென. - 35
1128 - ஆர்த்திடு கரிபரி அவுண ராயினோர்
தேர்தொகை மாளிகை சிகரம் மாய்ந்திடக்
கூர்த்திடு நெடுங்கணை கோடி கோடிகள்
தூர்த்தனர் சென்றனர் துணைவ ராயினோர். - 36
1129 - அன்னதோர் அமைதியின் ஆடல் மொய்ம்பினான்
வன்னியின் படையொடு மருத்தின் மாப்படை
பொன்னெடுஞ் சிலைதனில் பூட்டி நீவிர்போய்
இந்நகர் அழித்திரென் றிமைப்பில் ஏவினான். - 37
1130 - ஏவிய அப்படை இரண்டும் ஒன்றியே
மூவுல கிறுதியின் முடிக்கும் தம்முரு
மேவின நகரெலாம் விரவிச் சூழ்ந்தன
தீவிழி அவுணரும் இரிந்து சிந்தவே. - 38
1131 - ஒட்டலர் நமையினி உருத்துச் செய்வதென்
விட்டனன் இங்குளன் வெருவ லேமெனா
நெட்டழல் கொளுவியே நிலவி மாநகர்
சுட்டன உடுநிரை பொரியில் துள்ளவே. - 39
1132 - எரிந்தன சில்லிடை இறந்து பூழியாய்
விரிந்தன சில்லிடை வெடித்த சில்லிடை
கரிந்தன சில்லிடை கனலி சூழ்தலால்
பொரிந்தன சில்லிடை புகைந்த சில்லிடை. - 40
1133 - எப்புவ னங்களும் இறைஞ்சு சூர்நகர்
வெப்புறு கனல்கொள விளிந்து போயதால்
அப்புறழ் செஞ்சடை அமலன் மூரலால்
முப்புர மானவை முடிந்ததேயென. - 41
1134 - இன்னணம் இந்நகர் எரிமி சைந்துழி
அன்னவை ஒற்றர்கள் அறிந்து வல்லைபோய்ப்
பொன்னிவர் கடிநகர் புகுந்து வாய்வெரீஇ
மன்னவர் மன்னனை வணங்கிக் கூறுவார். - 42
1135 - காய்கதிர் அண்ணலைக் கனன்ற நின்மகன்
மாயவெம் படையினால் மலைந்து ளார்தமைத்
தூயதொர் புனற்கடல் துன்ன உய்த்தனன்
நீயது தொ¤ந்தனை நிகழ்ந்த கேட்டிமேல். - 43
1136 - அங்கிவை நாரதன் அறையக் கந்தவேள்
செங்கையில் வேற்படை செலுத்த அன்னது
பொங்குறு தெண்புனற் புணரி சேறலும்
மங்கிய தோடிய மாயை தன்படை. - 44
1137 - வஞ்சனி தன்படை மாண்டு போந்துழித்
துஞ்சுதல் ஒழிந்தனர் தொன்மை போலவே
நெஞ்சினில் உணர்வெலாம் நிகழ யாவரும்
உஞ்சனர் எழுந்தனர் உம்பர் ஆ£¢த்திட. - 45
1138 - மாற்படு புந்திதீர் மறவர் தாமுறு
பாற்பட வருவது பார்த்துக் கைகொழு
தேற்பொடு பணிதலும் யாரும் வம்மெனா
வேற்படை முன்னுற விரைந்து மீண்டதே. - 46
1139 - மேணிகழ் நெறிகொடு மீண்ட செய்யவே
லானது குமரவேள் அங்கை போந்ததால்
ஊனமில் மற்றலர் ஒல்லை வந்துநம்
மாநகர் மேற்றிசை வாயில் நண்ணினார். - 47
1140 - மேற்றிசை வாய்தலின் வீரர் சேறலும்
ஏற்றனன் தானையோ டிருந்த காவலன்
ஆற்றினன் சிறிதமர் அவன தாவியை
மாற்றினர் அனிகமும் மாண்டு போயதே. - 48
1141 - குடதிசை எயிலினைக் கொடிய பூதர்கள்
அடிகொடு தள்ளினர் ஆணடு நின்றிடு
படியறு சிகரியைப் பறித்து மாநகர்
நடுவுற வீசினர் நமர்கள் மாயவே. - 49
1142 - சோர்வறு பூதருந் துணைவ ராகிய
வீரருந் தலைவனாம் வீர வாகுவும்
சீரிய நகரிடைச் சென்று மேற்றிசை
ஆரழல் கொளுவிநின் றழித்தல் மேயினார். - 50
1143 - அண்டலர் வன்மையால் அயுத யோசனை
உண்டது கொழுங்கனல் உண்ட எல்லையும்
கண்டனம் இதனைநீ கருத்தில் ஐயமாக்
கொண்டிடல் மன்னவென் றொற்றர் கூறினார். - 51
1144 - வேறு
ஒற்றர் இவ்வகை உரைத்தலும் அவுணர்கோன் உளத்தில்
செற்றம் மிக்கன நெறித்தன உரோமங்கள் சிலிர்த்த
நெற்றி சென்றன புருவங்கள் மணிமுடி நிமிர்ந்த
கற்றை வெங்கனல் கான்றன சுழன்றன கண்கள். - 52
1145 - கறங்கு சிந்தனைச் சூரன்இத் தன்மையில் கனன்று
மறங்குகொள் சாரணர் தங்களை நோக்கிநீர் வான்போய்ப்
பிறங்கும் ஊழியில் உலகெலாம் அழித்திடப் பெயர்வான்
உறங்கு மாமுகில் யாவையும் தருதிரென் றுரைத்தான். - 53
1146 - அயலின் நிற்புறு தூதுவர் வினவியே ஐய
இயலும் இப்பணி யெனததொழு தும்பரின் ஏகிப்
புயலி னத்தினைக் கண்டுதம் பாணியால் புடைத்துத்
துயிலெ ழுப்பியே விளித்தனன் இறையெனச் சொற்றா£¢. - 54
1147 - எழுவ கைப்படு முகில்களும் வினவியே ஏகி
விழுமி தாகிய மகேந்திரத் திறைவன்முன் மேவித்
தொழுது நிற்றலும் இத்திரு நகரினைத் தொலைக்கும்
அழலி னைத்தணி வித்திடு வீரென அறைந்தான். - 55
1148 - அறையும் எல்லையில் நன்றென எழிலிகள் அகன்று
செறித ரும்புகை உருக்கொடு விண்மிசைச் சென்றோர்
இறையில் எங்கணும் பரந்தன மாவலி யிடை போய்க்
குறிய மாயவன் நெடியபே ருருவுகொண் டதுபோல். - 56
1149 - கருமு கிற்கணம் முறைமுறை மின்னின ககனத்
துருமி டிக்குலம் ஒராயிர கோடியை உகுத்த
பருமு டிக்குல கிரியொடு மேருவும் பகிர்ந்த
திருமு டித்தலை துளக்கியே வெருவினன் சேடன். - 57
1150 - விண்டு லாமதிற் கடிநகர் தன்னைவெங் கனலி
உண்டு லாவுறு தன்மையும் அவுணர்தம் முலைவும்
கண்டி யாமிது தொலைந்திடின் ஈண்டொரு கணத்தில்
அண்டர் நாயகன் தானைமன் னவன்எமை அடுமால். - 58
1151 - நீட்ட மிக்கஇத் திருநகர் புகுந்துநீ றாக்கி
வாட்டும் வெந்திறல் எரியினை அகற்றிலம் வறிது
மீட்டும் ஏகுதும் என்றிடின் அவுணர்கோன் வெகுண்டு
பூட்டும் வன்றளை செய்வதென் என்றன புயல்கள். - 59
1152 - தொல்லை மாமுகில் இவ்வகை உன்னியே சூரன்
எல்லை யில்பகல் இட்டிடும் உவளகத் தெய்தி
அல்லல் உற்றிடு கின்றதின் ஆடலம் புயத்தோன்
கொல்ல நம்முயிர் வீடினும் இனிதெனக் குறித்த. - 60
1153 - புந்திமேல் இவை துணிபென நாடியே புயல்கள்
சிந்து துள்ளியொன் றிபத்துணை அளவையிற் செறிய
முந்தி யோரிறை பொழிந்தன பொழிதலும் முடிந்த
அந்த மாநகர் மேற்றிசை பொடித்திடும் அழலே. - 61
1154 - ஆய தன்மையை நோக்கினான் ஆறிரு தடந்தோள்
நாய கன்படைக் கிறையவன் அழலெழ நகைத்துத்
தீயின் ஆற்றலை அழித்தன மேகமோ செறுநர்
மாய மேகொலோ என்றுதேர் வுற்றனன் மனத்தில். - 62
1155 - தேரு கின்றுழி நாரதன் விண்ணிடைச் சென்று
வீர கேள்இவை ஊழிநாள் முகிலினம் வெய்ய
சூரன் ஆணையால் வந்தன வடவையம் தொல்லோன்
மூரி வெம்படை தொடுத்தியால் விரைந்தென மொழிந்தான். - 63
1156 - விண்ணில் வந்திவை நாரதன் உரைத்தனன் மீட்டும்
துண்ணெ னச்செல வினவியே வாகையம் துணைத்தோள்
அண்ணல் ஊழிநாள் அனற்படை தூண்டினன் அதுபோய்க்
கண்ண கல்முகில் இனத்தினைச் சூழ்ந்தது கணத்தில். - 64
1157 - சூழல் போகிய எழிலிகள் யாவையும் சுற்றி
ஊழி மாப்படை அவற்றிடைப் புனலெலாம் உண்டு
வாழி மொய்ம்பனை அடைந்தது மற்றது காலை
ஆழி மால்கடல் தொகையென வீழந்தன அவையே. - 65
1158 - மறிந்த எல்லையில் ஆறுமா முகமுடை வள்ளல்
சிறந்த ஆறெழுத் துண்மையை விதிமுறை செப்ப
இறந்த தொல்மிடல் வருதலும் உய்ந்துடன் எழுந்து
புறந்த ருங்கடல் அதனிடை ஓடின புயல்கள். - 66
1159 - விழுந்து கொண்டல்கள் இரிதலும் பாரிட வௌ¢ளம்
எழுந்து துள்ளியே ஆர்த்தன மலர்மழை இமையோர்
பொழிந்து வானிடை ஆடினர் இவைகண்டு பொறாமல்
உழுந்து கண்ணடி செல்லுமுன் போயினர் ஒற்றர். - 67
1160 - வேறு
கொற்றவை ஆடுறு கோநகர் எண்ணி
அற்றமில் மன்னன் அடித்துணை மீது
தற்றுறு பூமுடி தாழ இறைஞ்சி
மற்றிது கேண்மிய என்று வகுப்பார். - 68
1161 - ஊழி புகுந்துழி உற்றிடு கொண்மூ
ஏழும் விரைந்துநின் ஏவலின் விண்போய்
வீழ்புனல் சிந்துபு மேற்றிசை தன்னில்
குழுறும் அங்கி யினைத்தொலை வித்த. - 69
1162 - மாற்றலர் தூதுவன் மற்றது காணூஉ
வீற்றுறு தீப்படை ஏழ்முகில் மீது
மாற்றலின் விட்டிட அன்னவை வீழ்ந்து
மேற்றிசை வாய்தலில் வேலை புகுந்த. - 70
1163 - வன்னி செறிந்தன மாய்ந்தன என்றே
உன்னலை பூதர் ஒழிந்திடும் வீரர்
அன்னதன் எண்மையின் ஆடுறு கின்றார்
இந்நகர் என்றலும் ஏந்தல் முனிந்தான். - 71
1164 - வேறு
மயிர்ப்புறம் பொடித்திட வரைகொள் மார்பகம்
வியர்ப்புற எரிதழல் விழிகள் சிந்திட
உயிர்ப்பிடை புகைவர உருமுக் கான்றெனச்
செயிர்த்திடு மன்னவன் இதனைச் செப்பினான். - 72
1165 - போரினை இழைத்துவெம் பூதர் தங்களை வீரர்கள்
தொகையினை வீட்டிப் பின்னுறச்
சாருறு சிவன்மகன் தன்னை வென்றிவட்
சேருதுங் கொணர்திர்நந் தேரை என்றனன். - 73
----
7. இரணியன் யுத்தப் படலம் * (1166-1303)
1166 - ஒற்றரை நோக்கியே உணர்வின் மன்னவன்
சொற்றது கேட்டலும் துளங்கி ஏங்கினான்
மற்றவன் அளித்திடு மதலை மாரிநாட்
புற்றுறை அரவெனப் புழுங்கு நெஞ்சினான். - 1
1167 - ஆயிர மறையுணர்ந் தான்ற கேள்வியான்
தூயநல் லறத்தொடு முறையும் தூக்கினோன்
மாயமும் வஞ்சமும் மரபில் கற்றனன்
தீயதோர் அவுணருள் திறலும் பெற்றுளான். - 2
1168 - தரணியின் கீழுறை அரக்கர் தங்கள்மேல்
விரணம தாகிமுன் வென்று மீண்டனன்
முரணுறு சென்னியோர் மூன்று கொண்டுளான்
இரணியன் என்பதோர் இயற்கைப் பேரினான். - 3
1169 - இருந்தனன் ஒருபுடை எழுந்து தாதைதன்
திருந்தடி இணையினைச் சென்னி சேர்த்திடாப்
பொருந்துவ தொன்றுள புகல்வன் கேளெனாப்
பரிந்துநின் றினையன பகர்தல் மேயினான். - 4
1170 - தேவரை நாம்சிறை செய்த தன்மையால்
ஆவது பாவமே ஆக்கம் வேறிலை
யாவையும் உணர்ந்திடும் இறைவ திண்ணமே
போவது நம்முயிர் திருவும் பொன்றுமால். - 5
1171 - சூருடைக் கானகம் தோற்றும் புன்மைபோய்ப்
பாரிடைப் புவனமோர் பலவும் போற்றியே
சீருடைத் தாகிஇத் திருவின் வைகுதல்
ஆரிடைப் பெற்றனை அதனைத் தேர்திநீ. - 6
1172 - மாலைமுன் வென்றதும் மலர யன்றனை
ஏலுறு முனிவரை ஏவல் கொண்டதும்
மேலுயா¢ அமரரை விழுமஞ் செய்தலும்
ஆலமர் கடவுள்தன் ஆற்ற லால்அன்றோ. - 7
1173 - அரிபொர வருவனேல் அமரர் கோனொடும்
பிரமன்வந் தேற்குமேற் பிறர்கள் நேர்வரேல்
பொருவதும் வெல்வதும் புறத்தைக் கண்டுபின்
வருவதும் எளிதரோ கடனும் மற்றதே. - 8
1174 - நோற்றிடு தவத்தினை நோக்கி எண்ணிலாப்
பேற்றினை உதவிய பிரானொர் தீமையான்
மாற்றிட உன்னுமேல் வணங்கி மாறொரீஇப்
போற்றுதல் அன்றியே பொரவுஞ் செய்யுமோ. - 9
1175 - ஒன்றொரு பயன்றனை உதவி னோர்மனங்
கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்
புன்றொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே
கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ. - 10
1176 - கந்தனை அருள்பு£¤ கடவுள் ஆணையைச்
சிந்தையின் மாறுகொள் சிறியர் யாவரும்
அந்தம தடைந்தனா அன்றி வன்மையால்
உய்ந்தனர் இவரென உரைக்க வல்லமோ. - 11
1177 - கட்டுசெஞ் சடைமுடிக் கடவுள் காமனைப்
பட்டிட விழித்ததும் பண்டு மூவெயில்
சுட்டதும் அந்தகன் சுழலச் சூலமேல்
இட்டதுங் கேட்டிலை போலும் எந்தைநீ. - 12
1178 - காலனை உதைத்ததுங் கங்கை யென்பவள்
மேல்வரும் அகந்தையை வீட்டிக் கொண்டதும்
மாலயன் அமரர்கள் இரிய வந்ததோர்
ஆலம துண்டதும் அறிகி லாய்கொலோ. - 13
1179 - அண்டரை யோர்அரி யலைப்ப அன்னது
கண்டநஞ் சுடையவன் கருதி வீரனால்
தண்டம திழைத்ததுந் தக்கன் வேள்வியை
விண்டிடு வித்ததும் வினவி லாய்கொலோ. - 14
1180 - கடிமலர் மேலவன் இகழக் கண்ணுதல்
வடுகனை ஏவிவள் ளுகிரின் அன்னவன்
முடிகளை வித்தது முகுந்தன் தன்னிடை
அடைதரு வித்ததும் அறிகி லாய்கொலோ. - 15
1181 - முந்தொரு மகபதி மொய்ம்பை அட்டதும்
ஐந்தியல் அரக்கரை அழித்த செய்கையும்
தந்தியை உழுவையை உரித்த தன்மையும்
எந்தைநிற் குணர்த்தினர் இல்லை போலுமால். - 16
1182 - ஏமுற உலகடும் ஏனக் கொம்பினை
ஆமையின் ஓட்டினை அணிந்த தன்மையும்
பூமலர் மிசையவன் முதல புங்கவர்
மாமுடி அணிந்ததும் மதிக்கி லாய்கொலோ. - 17
1183 - கதித்திடு முனிவரர் கடிய வேள்வியில்
உதித்திடு முயலகன் ஒல்லென் றார்த்தெழப்
பதத்தினில் உதைத்தவன் பதைப தைத்திட
மிதித்ததும் பிறவுநீ வினவிற் றில்லையோ. - 18
1184 - ஒன்னலர் தன்மைபூண் டுற்று ளோர்தமைத்
தன்னிகர் இல்லவன் தண்டம் செய்தன
இன்னமோர் கோடியுண் டிருந்தி யான்இவண்
பன்னினும் உலப்புறா செல்லும் பல்லுகம். - 19
1185 - வேறு
ஆதலால் ஈசன் தன்னை அடைந்தவர் உய்வர் அல்லாப்
பேதையர் யாவ ரேனும் பிழைக்கலர் இனைய வாய்மை
வேதநூல் பிறவும் கூறும் விழுப்பொரு ளாகும் நீயும்
ஏதமா நெறியின் நீங்கி இப்பொருள் உணர்தி எந்தாய். - 20
1186 - இன்னமொன் றுரைப்பன் நீமுன் இருந்தவம் இயற்ற இந்த
மன்னிலை புரிந்த மேலோன் மாற்றவும் வல்ல னாமால்
அன்னவன் குமரன் தன்னோ டமர்செய்வ தியல்போ ஐய
தன்னினும் உயர்ந்தா ரோடு பொருதிடில் சயமுண் டாமோ. - 21
1187 - பூதல வரைப்பும் வானும் திசைகளும் புணரி வைப்பும்
மேதகு வரையும் தொன்னாள் வேறுபா டுற்ற நோக்கி
ஈதென மாயம் கொல்லென் றெண்ணினம் அனைய வெல்லாம்
ஆதிதன் குமரன் செய்த ஆடலென் றுரைத்தா ரன்றே. - 22
1188 - அண்ணலங் குமரன் ஆடல் அறிகிலர் மருளுங் காலைக்
கண்ணிடை அன்னான் மற்றோர் வடிவினைக் காட்டி நிற்ப
விண்ணவர் பலரும் சூழ்ந்து வெகுண்டனா¢ வெம்போர் ஆற்றத்
துண்ணென அவரை அட்டாங் கெழுப்பினன் தூயோ னென்பர். - 23
1189 - எண்டொகை பெற்ற அண்டம் யாவையும் புவ வைப்பும்
மண்டுபல் வளனும் ஏனை மன்னுயிர்த் தொகுதி முற்றும்
அண்டரும் மூவர்தாமும் அனைத்துமா கியதன் மேனி
கண்டிட இமையோர்க் கெல்லாம் காட்டினன் கந்தன் என்பர். - 24
1190 - மறைமுத லவனை முன்னோர் வைகலின் வல்லி பூட்டிச்
சிறையிடை வைத்துத் தானே திண்புவி அளித்து முக்கண்
இறையவன் வேண்ட விட்டான் என்பரால் இனைய வாற்றால்
அறுமுகன் செய்கை கேட்கின் அற்புத மாகு மன்னோ. - 25
1191 - அங்கண்மா ஞாலம் தன்னை மேலினி அகழு மோட்டுச்
செங்கண்மால் ஏன யாக்கை எயிற்றையோர் சிறுகை பற்றி
மங்குல்வா னுலகிற் சுற்றி மருப்பொன்று வழுத்த வாங்கித்
தங்கணா யகற்குச் சாத்தச் சண்முகன் அளிக்கு மென்பர். - 26
1192 - நேநலர் புரமூன் றட்ட நிருமலக் கடவுள் மைந்தன்
ஆரினும் வலியோன் என்கை அறைந்திட வேண்டுங் கொல்லோ
பாரினை அளந்தோன் உய்த் பரிதியை அணியாக் கொண்ட
தாரகன் தன்னை வெற்பைத் தடிந்தது சான்றே அன்றோ. - 27
1193 - அறுமுகத் தொருவ னாகும் அமலனை அரன்பால் வந்த
சிறுவனென் றிகழல் மன்னா செய்கையால் பெரியன் கண்டாய்
இறுதிசேர் கற்பம் ஒன்றின் ஈறிலா தவன்பால் தோன்றும்
முறுவலின் அழலு மன்னோ உலகெலாம் முடிப்ப தம்மா. - 28
1194 - வாசவன் குறையும் அந்தண் மலரயன் குறையும் மற்றைக்
கேசவன் குறையும் நீக்கிக் கேடிலா வெறுக்கை நல்க
வாசிலோர் குழவி போலாய் அறுமுகங் கொண்டான் எண்டோள்
ஈசனே என்ப தல்லாற் பிறிதொன்றை இசைக்க லாமோ. - 29
1195 - கங்கைதன் புதல்வன் என்றுங் கார்த்திகை மைந்தன் என்றுஞ்
செங்கண்மால் மருகன் என்றுஞ் சேனையின் செல்வன் என்றும்
பங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை
இங்கிவை பலவுஞ் சொல்வ தேழைமைப் பால தன்றோ. - 30
1196 - பன்னிரு தடந்தோள் வள்ளல் பரிதியம் பகைவன் சூழ்வால்
தன்னுறு படைஞர் மாய்ந்த தன்மையை வினவித் தாழா
தன்னவர் மீளு மாற்றால் அளக்கர்மேல் விடுத்த வேலை
இந்நகர் தன்னில் தூண்டின் யாரிவண் இருத்தற் பாலார். - 31
1197 - தாரகற் செற்ற தென்றால் தடவரை பொடித்த தென்றால்
வார்புனற் கடலுள் உய்த்த வலியரை மீட்ட தென்றால்
கூருடைத் தனிவேல் போற்றிக் குமரன்றாள் பணிவ தல்லால்
போரினைப் புரிதும் என்கை புலமையோர் கடன தாமோ. - 32
1198 - அரனிடைப் பிறந்த அண்ணல் ஆணையால் வந்த தூதன்
திருநகர் அழித்தான் முன்னஞ் சேனையுந் தானு மேகி
ஒருபகற் பானு கோபன் உலைவுறப் பொருது வென்று
கருதரும் அவுணர் தானைக் கடலையுங் கடந்து போனான். - 33
1199 - இப்பகல் வந்து வீரன் இருஞ்சமர் இயற்ற என்முன்
தப்பினன் மறைந்து மாயைப் படைதொடா உணர்ச்சி தள்ளி
அப்புனல் அளக்கர் உய்ப்ப அறுமுகன் வேலான் மீண்டுன்
மெய்ப்பதி யடுவான் என்றால் அவனையா£ வெல்லற் பாலார். - 34
1200 - இறுதியும் எய்தான் என்னின் ஏற்றதொல் லுணர்ச்சி மாய்ந்து
மறியினும் எழுவன் என்னின் மாயையுந் தொலையும் என்னின்
செறியும்விண் முதல்வர் தந்த படைக்குநோ¢ செலுத்து மென்னின்
அறிஞர்கள் அவன்மேற் பின்னும் அமர்செயக் கருது வாரோ. - 35
1201 - தூதென முன்னர் வந்தோன் ஒருவனால் தொலையும் இந்த
மூதெயில் நகர முற்றும் அவுணரும் முடிவர் என்னின்
ஆதியும் முடிவும் இல்லா அறுமுகன் அடுபோர் உன்னிப்
போதுமேல் இமைப்பின் எல்லாப் புவனமும் பொன்றி டாவோ. - 36
1202 - கரங்கள்பன் னிரண்டு கொண்ட கடவுள்வந் தெதிர்க்கின் நந்தம்
வரங்களும் படைகள் யாவும் மாயையுந் திறலுஞ் சீரும்
உரங்களுந் திருவு மெல்லாம் ஊழிநா யகன்முன் னுற்ற
புரங்களும் அவுண ரும்போற் பூழிபட் டழிந்தி டாவோ. - 37
1203 - ஒற்றனை விடுத்து நாடி உம்பரை விடாமை நோக்கி
மற்றிவட் போந்து நம்மேல் வைகலும் வந்தி டாது
சுற்றுதன் தானை யோடுந் தூதனைத் தூண்டி அங்கண்
இற்றையின் அளவு நம்பாற் கருணைசெய் திருந்தான் ஐயன். - 38
1204 - கருணைகொண் டிருந்த வள்ளல் கருத்திடைத் தொலைவில் சீற்றம்
வருவதன் முன்னம் இன்னே வானவர் சிறையை மாற்றி
உரியநந் தமரும் யாமும் ஒல்லையின் ஏகி ஐயன்
திருவடி பணிந்து தீயேஞ் செய்தன பொறுத்தி யென்று. - 39
1205 - பணிந்துழி அமல மூர்த்தி பலவுநாம் புரிந்த தீமை
தணிந்தருள் செய்து தானுந் தணப்பிலா வரங்கள் நல்கி
அணிந்ததன் தானை யோடும் அகலுமால் உய்தும் யாமும்
துணிந்திது புகன்றேன் ஈதே துணிவென மதலை சொற்றான். - 40
1206 - வேறு
பரிந்துதனக் குறுதியிவை தெருட்டுதலும் அதுகேளாப் பகுவாக் கால,
விரிந்தபுகைப் படலிகைபோய்த் திசையனைத்தும் விழுங்கியிட வெகுளி மூளக்,
கரிந்ததன துடல்வியர்ப்ப உயிர்ப்புவர இதழதுடிப்பக் கண்கள் சேப்ப,
எரிந்துமனம் பதைபதைப்ப உருமெனக்கை எறிந்துநகைத் தினைய சொல்வான். - 41
1207 - தூவுடைய நெடுஞ்சுடர்வேல் ஒருசிறுவன் ஆற்றலையும் தூதாய் வந்த,
மேவலன்தன் வலியினையும் யான்செய்யப் படுவனவும் விளம்பா நின்றாய்,
ஏவருனக் கிதுபுகன்றார் புகன்றாரை உணர்வேனேல் இன்னே அன்னோர்,
ஆவிதனைக் களைந்திடுவேன் ஆங்கவர்தொல் குலங்களெலாம் அடுவன் யானே. - 42
1208 - ஞாலமெலா முன்படைத்த நான்முகன்ஐந் தியலங்கம் நவின்று போவான்,
ஆலமிசைத் துயில்கூர்வான் என்னிளவல் தனக்குடைந்தான் அமரர் கோமான்,
வேலைதனின் மீன்முழுதும் என்பணியில் தந்தனனால் வௌ¢ளி வெற்பின்,
நீலமிடற் றவன்மகனோ தொலைவறுமென் பேராற்றல் நீக்கு கின்றான். - 43
1209 - அரியயனும் புரந்தரனும் விண்ணவர்க ளெல்லோரும் அகிலந் தன்னின்,
விரவுகணத் தவரெவரும் யார்க்குமுத லாகுமுக்கண் விமலன் தானும்,
பொருசமரின் ஏற்றிடினும் எனக்கழிவ தன்றிவென்று போவ துண்டோ,
ஒருசிறிதும் புந்தியிலா மைந்தாயான் பெற்றவரம் உணர்கி லாயோ. - 44
1210 - வேறு
ஆற்றல் விட்டனை குலமுறை பிழைத்தனை அரசின்
ஏற்றம் நீங்கினை ஒன்னலர்க் கஞ்சினை இசைத்தாய்
மாற்றம் ஒன்றினி உரைத்தியேல் உன்றனை வலலே
கூற்று வன்புரத் தேற்றுவன் யானெனக் கொதித்தான். - 45
1211 - கொதித்த வேலையின் மைந்தனும் நம்முரை கொடியோன்
மதித்தி லன்இவன் மாய்வது சரதமே வான்மேல்
உதித்த செங்கதிர்ப் பரிதியங் கடவுள்சூழ உலகில்
விதித்தி றந்தனை யாவரே வன்மையால் வென்றோர். - 46
1212 - இறுதி யாகிய பருவம்வந் தணுகிய திவனுக்
குறுதி யாம்பல கூறினென் பயனென உன்னா
அறிவன் நீசில அறிந்தனன் போலநிற் கறைந்தேன்
சிறுவன் ஆதலிற் பொறுத்தியென் றாற்றினன் சீற்றம். - 47
1213 - வெஞ்சி னந்தனை ஆற்றியித் தாதைதான் விரைவில்
துஞ்சு முன்னர்யான் இறப்பது நன்றெனத் துணியா
எஞ்ச லில்லவன் தாளிணை வணங்கிநீ யிசைத்த
வஞ்சி னந்தனை முடிப்பன்யான் என்றனன் மைந்தன். - 48
1214 - அனைய வேலையில் ஐயநீ மாற்றலர்க் கஞ்சி
வினையம் யாவுமுன் னுரைத்தனை அவர்கள்பால் வீரம்
புனைய உன்னிய தென்கொலோ என்றலும் பொன்னோன்
உனது மைந்தன்யான் அஞ்சுவ னோவென உரைத்தான். - 49
1215 - தாதை அன்னதோர் வேலையின் மைந்தனைத் தழீஇக்கொண்
டீது நன்றுநன் றுன்பெருந் தானையோ டெழுந்து
போதி யென்றலும் விடைகொடு புரந்தனில போந்து
மாதி ரம்புகழ் கின்றதன் னுறையுளில் வந்தான். - 50
1216 - நிறங்கொள் மேருவை நிலாக்கதிர் உண்டநீர் மையைப்போல்
மங்கொள் சூர்மகன் ஆடக மெய்யில்வச் சிரத்தின்
திறங்கொள் சாலிகை கட்டினன் தூணியின் செறித்தான்
பிறங்கு கோதையும் புட்டிலும் கைவிரல் பெய்தான். - 51
1217 - அடங்க லர்க்குவெங் கூற்றெனும் ஆடல்வில் லொன்றை
இடங்கை பற்றினன் வலங்கையில் பலபடை எடுத்தான்
தடங்கொள் மோலியில் தும்பையஞ் சிகழிகை தரித்தான்
மடங்கல் ஆயிரம் பூண்டதேர் புக்கனன் வந்தான். - 52
1218 - ஆற்றல் மிக்குறு துணைவர்ஆ யிரவரும் அனிகம்
போற்று மன்னர்ஆ யிரவரும் போரணி புனைந்து
காற்றெ னப்படர் கவனமான் தேரிடைக் கலந்து
நாற்றி றற்படை தன்னொடு புடைதனில் நடப்ப. - 53
1219 - நூறொ டேயெழு நூறுவௌ¢ ளந்நொறி லுடைத்தேர்
சீறும் யானையும் அத்தொகை அவுணர்தஞ சேனை
ஆறு நூற்றிரு வௌ¢ளத்த பரிகளும் அனைத்தே
சூறை மாருத மாமென அவன்புடை சூழ்ந்த. - 54
1220 - துடிக றங்கின கறங்கின பேரிதுந் துபிப்பேர்
இடிக றங்கின வலம்புரி கறங்கின எடுக்கும்
கொடிக றங்கின தானைகள் கறங்கின குனித்துக்
கடிக றங்கின கறங்கின கழுகொடு காகம். - 55
1221 - வசலை மென்கொடி வாடிய தன்னநுண் மருங்கில்
கிசலை யம்புரை சீறடிக் கிஞ்சுகச் செவ்வாய்ப்
பசலை சேர்முலை மங்கையர் விழிக்கணை பாய
வசலை மங்கைதன் மெய்த்தனு வளைந்திட அகன்றான். - 56
1222 - அறந்த லைப்படும் இரணியன் அனிகநால் வகையும்
புறந்த லைப்படத் துயரமும் தலைப்படப் போந்து
மறந்த லைப்படு பூதர்கள் ஆர்ப்பொலி வழங்கும்
பறந்த லைக்களம் புக்கனன் அமரர்மெய் பனிப்ப. - 57
1223 - விண்ணு ளோர்களும் பிறருமவ் வியனகர் நோக்த்
துண்ணெ னத்துளங் குறுவதுங் கண்டனன் தொன்னாள்
மண்ணி னுள்ளபா ரிடமெலாம் வல்லைவந் தழித்து
நண்ணு கின்றதுங் கண்டனன் நன்றென நக்கான். - 58
1224 - தனது மாநகர் அழிந்தது கண்டனன் தணியா
முனிவு கொண்டனன் வெய்துயிர்த் தனன்உடல் முற்றும்
நனிவி யர்ப்புள தாயினன் மருங்குற நணுகும்
அனிக வேந்தரைத் துணைவரை நோக்கியீ தறைவான். - 59
1225 - ஆயி ரம்வௌ¢ளம் ஓரொரு திசையினில் ஆக்கி
நீயிர் யாவரும் நால்வகைத் தாகியே நீங்கி
மாயி ருந்திறற் சாரதன் வீரரை வளைந்து
போயெ திர்ந்துவெஞ் சமர்புரி வீரெனப் புகன்றான். - 60
1226 - அக்க ணந்தனில் துணைவரும் அனிகமன் னவருந்
தக்க தேயென இரணியன் மொழிதலைத் தாங்கித்
திக்கி லாயிரம் வௌ¢ளமாச் சேனையைக் கொண்டு
தொக்க பாரிட வௌ¢ளமேற் போயினார் சூழ. - 61
1227 - தானை மன்னரும் துணைவரும் திசைதொறும் தழுவிப்
போன காலையில் ஆடகன் குடபுலம் புகுதுஞ்
சேனை முன்கொடு சென்றனன் இன்னதோர் செய்கை
மான வேற்படைக் காவலன் கண்டனன் மன்னோ. - 62
1228 - வீர மொய்ம்பினன் அதுகண்டு வெஞ்சமர்க் குறுவான்
சூரன் மைந்தருள் ஒருவனோ சுற்றமா யினனோ
ஆரி வன்கொலென் றையுறு காலையின் அயலே
நார தன்எனும் முனிவரன் வந்திவை நவில்வான். - 63
1229 - இரணி யன்எனும் மைந்தனைச் சூரன்இங் கேவ
அருணன் என்னவந தடைந்தனன் அம்படை யலைப்ப
வருணன் இந்திரன் மந்திரி மறலிமா திரத்தின்
முரணு றும்படை நான்கையும் முன்னுறச் செலுத்தி. - 64
1230 - மாயை வல்லவன் படைபல பரித்தவன் வஞ்ச
மாய சூழச்சிகள் பற்பல தெரிந்தவன் அவனை
நீய லாதுவெல் கின்றவர் இல்லையால் நினக்கிங
கேய தன்மையின் அமா¢தனைப் புரிதியா லென்றான். - 65
1231 - என்று கூறியே நாரதன் விண்மிசை ஏக
நன்று நன்றென அன்னதை வினவியே நகைத்துத்
துன்று பாரிடத் தலைவரைச் சுற்றமா யுளரை
வென்றி மொய்ம்புடை ஆண்டகை நோக்கியே விளம்பும். - 66
1232 - ஏற்ற தானைய நமையெலாம் சூழ்ந்திட ஏவி
மாற்ற லன்மகன் குறுகுவான் நீவிரும் வல்லே
நாற்றி சைக்கணும் சாரதப் படையொடு நடந்து
வீற்று வீற்றுநின் றமர்புரி வீரென விளம்பி. - 67
1233 - வீரர் எண்மரை இலக்கரை வியன்கணத் தவரைப்
பாரி டங்களை நால்வகைப் படும்வகை பகுத்தே
ஈரி ரண்டுமா திரத்தினும் சென்றிட ஏவிச்
சூரன் மாமகன் வருதிசைப் படர்ந்தனன் தோன்றல். - 68
1234 - காலை யாங்கதின் அவுணமாப் பெரும்படை கடிதின்
நாலு மாதிரந் தன்னினும் நரலைசூழ்ந் தென்ன
ஓல மோடுவந் தணுகலும் உருத்துவெம் பூத
சாலம் யாவையும் ஏற்றன சமா¤னைப் புரிய. - 69
1235 - மற்ற வேலையில் அவுணர்கள் மழுப்படை நாஞ்சில்
கற்றை யஞ்சுடர்ப் பரிதிவா£¢ சிலையுமிழ் கணைகள்
கொற்ற மிக்குறு தோமரந் தண்டெழுக் குலிசம்
ஒற்றை முத்தலை வேல்முதற் படையெலாம் உய்த்தார். - 70
1236 - தோடு சிந்திய தேனறா மராமரத் தொகையின்
காடு சிந்தினர் கதைகளுஞ் சிந்தினர் கணிச்சி
நீடு சிந்துரப் பருவரை சிந்தினர் நேமி
மாடு சிந்தினர் சிந்தினர் பூதரில் வலியோர். - 71
1237 - தஆயை¤ ழந்தனர் கரங்களும் இழந்தனர் தாளின்
நிலையி ழந்தனர் சாரதர் அவுணரும் நெடுங்கை
மலையி ழந்தனர் தேர்பரி இழந்தனர் மறவெங்
கொலையி ழந்தனர் மடிந்தனர் குருதியுட் குளித்தார். - 72
1238 - வசையில் பூதரும் அவுணரும் இவ்வகை மயங்கித்
திசைதொ றும்பொரு கின்றுழித் தனித்தனி சோ¢ந்து
விசைய மொய்ம்பினான் விடுத்தி வீரரும் விறல்சேர்
அசுர வேந்தரும் வெஞ்சமர் விளைத்தனர் அன்றே. - 73
1239 - அனைய எல்லையின் வீரவா குப்பெயர் அறிஞன்
கனகன் முன்வரும் சேனைமாப் பெருங்கடல் கண்டு
முனிவு கொண்டுதன் பாணியின் மூரிவெஞ் சிலையைக்
குனிவு செய்தனன் அறத்தனிக் கடவுளும் குனிப்ப. - 74
1240 - மலைவ ளைத்திடு தன்மைபோல் வானுற நிமிர்ந்த
சிலைவ ளைத்தனன் நாணொலி யெடுத்தனன் தெழித்தான்
அலைவ ளைத்திடு கடலெலாம் நடுங்கிய அனந்தன்
தலைவ ளைத்தனன் எண்டிசை நாகமும் சலித்த. - 75
1241 - காலை யங்கதின் வீரமொய்ம் புடையதோர் காளை
கோலொ ராயிரப் பத்தினைக் குனிசிலைக் கொளுவி
மேல தாகிய கானிடைப் பொழிதரும் மேக
சால மாமெனப் பொழிந்தனன் அவுணர்தா னையின்மேல். - 76
1242 - பிடிகு றைந்தன களிற்றினம் குறைந்தன பிடிக்கும்
கொடிகு றைந்தன கொய்யுளைப் புரவிதேர் குறைந்த
அடிகு றைந்தன தலைகளும் குறைந்தன அம்பொன்
தொடிகு றைந்தன குறைந்தன அவுணர்தம் தோள்கள். - 77
1243 - எறித லுற்றிடு சூறையால் பல்கவ டிற்று
முறித லுற்றுவீழ் பொதும்பர்போல் மொய்ம்பன்£ ளியினால்
செறித லுற்றதம் வடிவெலாம் சிதைந்துவே றாகி
மறித லுற்றன நால்வகைப் படைகளும் மயங்கி. - 78
1244 - வேறு
ஆரியன் விட்ட அயிற்கணை பாய
மூரி மதக்கரி முற்றுயர் யாக்கை
சோரி உகுப்பன தொல்பக லின்கண்
மாருதம் உய்த்திடு வன்னியை யொப்ப. - 79
1245 - விறல்கெழு மொய்ம்பன் விடுத்திடு கின்ற
பிறைமுக வாளி பெருங்கரி யின்கை
அறைபுரி கின்றஅ ராத்தொகை தன்னைக்
குறைமதி சென்ற குறைப்பன போலாம். - 80
1246 - வித்தக வீரன் விடுங்கணை வேழ
மத்தக முற்றிட மற்றவை போழ்ந்தே
முத்தம் உகுப்ப முகந்திடு கும்பம்
உய்த்திடும் நல்லமு தச்சுதை யொக்கும். - 81
1247 - கரம்பட ருங்கவி கைத்தொகை தேரின்
உரம்படு கால்கள் உலம்புரை தோளான்
சரம்பட விற்ற தலைத்தலை உற்ற
வரம்பின் மதிக்குறை மல்கிய வென்ன. - 82
1248 - மேக்குயர் மொய்ம்பன் விடுங்கணை யால்பாய்
மாக்கள் துணிந்து மறிந்து கிடந்த
தேக்கிய தெண்கட லிற்றிரை முற்றும்
தாக்கிய சூறை தனக்கழிந் தென்ன. - 83
1249 - பெருந்தகை விட்ட பிறைத்தலை வாளி
திருந்தலர் தோலுறு செங்கை துணிப்ப
வருந்திட மாமதி வௌவும்அ ராவைத்
துரந்திடு கின்றதன் சுற்றம தென்ன. - 84
1250 - வேறு
தக்க வன்மையால் சிறந்துளோர் தமதுமாற் றலர்மேல்
மிக்க வெஞ்சினத் தேகல்போல் அனிகவௌ¢ ளத்தில்
தொக்கு வந்துவந் திழிந்தசெஞ் சோரியின் வௌ¢ளம்
மைக்க ருங்கடல் வௌ¢ளத்தி னூடுபோய் மடுத்த. - 85
1251 - குறைத்தி டும்பெரு ஞாளியும் குறுநரிக் குழாமும்
நிருத்த மேயின கவந்தமும் நிணனுண்டு செருக்கி
உருத்த குந்திறல் காளியும் கூளியும் ஒருசார்க்
கிருத்தி மங்களும் தலைத்தலை மயங்கின கெழுமி. - 86
1252 - சிலையின் வல்லவன் இவ்வகை கணைமழை சிதறி
நிலைய வெல்லையின் மலைந்திடும் தானவர் நீத்தம்
உலைப டுங்கனல முன்னுறும் இழுதென உடைந்து
குலைகு லைந்துதம உயிருடன் யாக்கையுங் குறைந்த. - 87
1253 - ஆளி யாயிரம் பூண்டதேர் மிசைவரும் அவுணா¢
மீளி யாயது கண்டனன் எடுத்ததோர் வில்லின்
வாளி யாயிரம் ஒருதொடை தூண்டியே மறவெங்
கூளி யாயிர கோடியோ ரிமைப்பினில் கொன்றான். - 88
1254 - கொன்ற காலையில் பூதவெம் படைகளும் குலைந்து
சென்ற மாதிரம் தெரிந்தில தழல்விடம் தெறக்கண்
டன்ற போகிய தேவரே ஆயினர் அதனை
நின்ற தானையம் தலைவரில் கண்டனன் நீலன். - 89
1255 - கண்ட நீலனும் இறுதிநாள் அழலெனக் கனன்று
திண்டி றற்கெழு மன்னவன் மதலைமுன் சென்றே
அண்ட முந்தலை பனித்திட உருமென ஆர்த்தான்
உண்டு போரிதி என்றனர் அமரரா யுள்ளோர். - 90
1256 - காலை யனனத்தில்அவுணர்தம் இறைமகன் கனன்று
வேல தொன்றினை ஆகமூழ் குற்றிட விடுப்ப
நீலன் வன்மைபோய் நின்றிலன் சென்றனன் நெடிய
சால மொன்றுகொண் டவன் தடந் தேரினைத் தடிந்தான். - 91
1257 - வையம் அங்கழி வெய்தலும் அவுணர்கோன் மற்றோர்
செய்ய தேரிடை வல்லையில் தாவிநாண் செறித்துக்
கையில் வாங்கிய சராசனத் திடையுறக் கடைநாட்
பொய்யின் மாமுகி லாமெனச் சுடுசரம் பொழிந்தான். - 92
1258 - பொழிந்த வார்கணை முழுவதும் அவனுரம் புகலும்
அழிந்தி லன்சிறி தஞ்சிலன் குலகிரி அன்றி
ஒழிந்த குன்றெலாம் பறித்தனன் வீசியே உடலத்
திழந்த சோரிநீர் சொரிதர நின்றனன் இமையான். - 93
1259 - நிருப னாகிய ஆடகன் தன்னெதிர் நீலன்
மரபின் நூக்கிய வரையெலாஞ் சரங்களால் மாற்ற
விரைவி னோடுபோய் அவன்தடந் தேரினை வெகுளா
ஒருகை யாலெடுத் தெறிந்தனன் அமரரும் உலைய. - 94
1260 - ஆற்ற லந்தடந் தேரினை வீசிட அதுவுங்
காற்று லாய்நிமிர் விண்ணுறப் போயது காளை
மாற்றொர் வையமேற் பாய்ந்திட உன்னினன் வரலும்
ஏற்றெ ழுந்தெதிர் புக்கனன் நீலனாம் இகலோன். - 95
12601 - நிற்றி நிற்றிநீ என்றுகொண் டேகியே நீலன்
எற்றி னான்அவன் உரத்திடை அவுணனும் இவனைப்
பற்றி வீசினான் பூதனும் மீண்டுதன் பதத்தாற்
செற்ற மோடுதைத் துருட்டிவான் உருமெனத் தெழித்தான். - 96
1262 - நெறிந்த பங்கிசேர் நீலனங் குதைத்திட நிருதர்
முறிந்து நீங்கிய களத்திடை வழுக்கிவீழ முகில்போல்
மறிந்து வீழ்தரும் அவுணன்மேற் பாய்ந்தனன் மகவான்
எறிந்த வச்சிரப் பெரும்படை இதுகொலென் றிசைப்ப. - 97
1263 - வீழ்ந்த காளையைத் தன்பெருந் தாள்களால் மிதிப்பக்
கீழ்ந்து போயது மாநிலம் அவன்முடி கிழிந்த
போழ்ந்த தாகமும் வாய்வழி குருதிநீர் பொழிய
வாழ்ந்து வெந்துயர் உழந்தனன் செய்வதொன் றறியான். - 98
1264 - திறல ழிந்தனன் சீற்றமும் அழிந்தனன் செங்கோல்
மறலி கொள்வதற் கணியனே ஆதலும் மனத்தில்
இறுதி எய்திய தீங்கனிச் செய்வதென் எமக்கோர்
உறுதி யாதென உன்னினன் பின்னரொன் றுணர்ந்தான். - 99
1265 - மாயம் ஒன்றினைப் புரிகுதும் யாமென வல்லே
ஆய மந்திரம் புகன்றனன் பூசனை அனைத்தும்
தூய சிந்தையால் நிரப்பினன் வேண்டிய துணியா
ஆய தெய்வதம் உன்னினன் அன்னதோர் எல்லை. - 100
1266 - வேறு
தன்போலொரு வடிவன்னதொர் சமரின்தலை அணுகா
மின்போலொளிர் தருபல்படை விரவும்படி பா¤யா
என்போலெவர் பொருகின்றவ ரெனவீரம துரையா
வன்போரது புரியும்படி வலிகொண்டுமுன் வரலும். - 101
1267 - கண்டானது வருகின்ற கடிதேயெதிர் நடவா
எண்டானவர் அமரின்தலை யிட்டேகிய தொருபொற்
றண்டானது கொண்டேஅதன் தலைமோதினன் இமையோர்
விண்டான்இவற் கழிந்தானென நீலன்தனை வியந்தார். - 102
1268 - வியக்கும்பொழு தினில்அன்னவன் விடுமாயமும் விசையால்
உயக்குற்றவ ரெனவிண்மிசை உயர்கின்றது காணாத்
துயக்குற்றிடு நீலன்னது தொடர்ந்தான்கரந் திடலும்
மயக்குற்றனன் நெடிதுன்னினன் மண்மீதுறக் கண்டான். - 103
1269 - காணாவல மருவானிது கரவாமென உணரான்
நாணால்மிகு சீற்றத்தொடு நணுகுற்றனன் அதுவுந்
தூணார்தடந் தோள்கொண்டமர் கொடங்குற்றது தொடங்கிச்
சேணாகிய தணித்தாயது திசையெங்கணுந் திரியும். - 104
1270 - பாரிற்புகும விண்ணிற்புகும் பரிதிச்சுட ரெனவே
தேரிற்புகும் மாவிற்புகும் சிலையிற்புகும் திரைமுந்
நீரிற்புகும் வடவாமுக நெருப்பிற்புகும் நீலக்
காரிற்புகும் நிரயத்திடை கடிதிற்புகும் எழுமே. - 105
1271 - முன்அவேரும் இடத்தேவரும் முதுவெம்பிடர் தழுவிப்
பின்னேவரும் வலத்தேவரும் பெரும்போரினைப் புரியும்
பொன்னேகரு தியமங்கையர் புலனாமெனத் திரியும்
என்னேஅதன் இயல்யாவையும் யாரேபுகல் வாரே. - 106
1272 - மாலுந்திறம் இதுபெற்றியின் வருகின்றதொர் மாயக்
கோலந்தனி தொடராவலி குறைந்தான்திரிந் துலைந்தான்
காலுந்தளர் கின்றானவன் கல்வித்திறம் புகழா
மேலென்செய லெனஉன்னி வெகுண்டான்அடல் வீரன். - 107
1273 - வென்றார்புகழ் தருவீரனும் வினையந்தனை உன்னி
நின்றான்அது காலந்தனில் நிருத்ன்றன துருவம்
ஒன்றாயது பலவாயுல கெல்லாமொருங் குறலால்
நன்றாமிது மாயம்மென நாணத்தொடு நவின்றான். - 108
1274 - திண்டோளுடை நீலன்னிது தௌ¤கின்றுழ அவனால்
புண்டோய்தரு குருதிப்புனல் புடைபோதரப் புவிமேல்
விண்டோனென மறிகின்றவன் மிடல்பெற்றெழுந் திதனைக்
கண்டோர்தடந் தேரேறினன் மாயத்தொடு கலந்தான். - 109
1275 - கலந்தானொரு சிலைவாங்கினன் கனல்வாளிகள் தெரியா
உலந்தானுறழ் தருமெய்யிடை உய்த்தானுவன் பொங்கர்
மலர்ந்தாலென உரம்புண்பட வடிவாளின் படநின்
றலந்தான்மன மெலிந்தான்பொரு தலுத்தான்மிகச் சலித்தான். - 110
1276 - வேறு
ஈண்டு சீர்த்தி இரணியன் மாயமும்
ஆண்டு நீலன் அயர்வது நோக்குறாப்
பூண்ட வாகைப் புயத்தவன் சீறியே
தூண்டு தேரொடு துண்ணென நண்ணினான். - 111
1277 - தாங்கு கின்றதன் தாழ்சிலை தோள்கொடே
வாங்கி நாணியின் வல்லிசை கோடலும்
வீங்கு மொய்ம்பின் விறல்கெழு தானவர்
ஏங்கி யாரும் இரிந்தனர் போயினார். - 112
1278 - சோதி நெற்றிச் சுடர்த்தனி வேலினான்
பாத மெய்த்துணை பன்முறை போற்றிடா
ஆத ரத்தின் அருச்சனை ஆற்றியே
சேத னப்படை செங்கையின் வாங்கினான். - 113
1279 - தூய போதகத் தொல்படை அன்னவன்
மாயை மேல்விட மற்றதன் பட்டிமை
ஆயி ரங்கதிர் ஆதவன் நேர்புறப்
போய கங்குல் நிசியெனப் போந்ததே. - 114
1280 - போந்த காலைப் புலம்புறு தானவர்
ஏந்த லேத மியாக எரியெனக்
காந்தி நின்றவன் காமர்வில் வாங்கியே
ஆய்ந்து தீங்கணை ஆயிரம் தூண்டினான். - 115
1281 - தூண்டு கின்ற சுடுகணை வீரமார்த்
தாண்டன் முன்னவன் தன்வரை மார்புறா
மீண்டு நுண்டுகள் ஆதலும் மேலது
காண்ட லுஞ்சுரர் கையெடுத் தார்த்தனர். - 116
1282 - பொறுத்த வாகைப் புயன்வலி வெவ்விடம்
நிறத்த நூறு நெடுங்கணை தூண்டியே
எறிந்த சீர்த்தி இரணியன் கேதனம்
அறுத்து வில்லொ டரணமுஞ் சிந்தினான். - 117
1283 - பொருவில் சாலிகை போதலுஞ் சூர்தரும்
திருவில் கோமகன் செங்கரம் தன்னில்வே
றொருவில் கொள்ளவொ ராயிரம் வெங்கணை
விரைவில் தூண்டின னால்விறல் மொய்ம்பினான். - 118
1284 - விடுத்த வாளிகள் வெவ்விறல் ஆடகன்
எடுத்த வாளி இருஞ்சிலை பின்னுறத்
தொடுத்த தூணிமுன் தூண்டிய பாகுதேர்
படுத்து மார்பகம் ப·றுளை செய்தவே. - 119
1285 - செய்ய வேறொரு தேர்மிசைச் சூரருள்
வெய்யன் வாவலும் வீரருள் வீரனாம்
ஐயன் வாளிகொண் டன்னது மட்டிட
மையல் எய்தி இழந்தனன் வன்மையே. - 120
1286 - வேறு பின்னரும் மேதகு சூர்மகன்
ஏறு தேர்க ளியாவையும் செல்லுமுன்
நூறு நூறு கணைகளின் நூறியே
ஈறு செய்தலும் ஏங்கியி தெண்ணினான். - 121
1287 - இநத் வேலை இடர்ப்படு மென்றனக்
கந்த மெய்திய தன்னவ னால்உயிர்
சிந்தும் என்னொடு தீர்வது வோஇனித்
தந்தை யாரும் இறத்தல் சரதமே. - 122
1288 - இற்ற காலை இருங்கடன் செய்திட
மற்றி யாவரும் இல்லைஇம் மாநகர்ச்
சுற்ற மானவ ருந்தொலைந் தார்இனி
உற்று ளோரும் இறப்பரி துண்மையே. - 123
1289 - உறுதி யாவ துரைக்கவும் ஆங்கது
வறிது மோர்கிலா மன்னவன் மாயுமுன்
இறுவ தேகடன் இற்றில னேயெனின்
அறுவ தோஎன் அகத்திட ராயினும். - 124
1290 - ஒய்யெ னச்சுர ரோடவென் கண்டஎன்
ஐயன் மற்றினித் துஞ்சின் அருங்கடன்
செய்வ தற்கொரு சேயுமிங் றாலெனின்
வைய கத்தில் வசையதுண் டாகுமே. - 125
1291 - மைந்த னைப்பெறு கின்றது மாசிலாப்
புந்தி அன்பொடு போற்றி வளர்ப்பதும்
தந்தை மாண்டுழித் தம்முறைக் கேற்றிட
அந்த மில்கடன் ஆற்றுதற் கேயன்றோ. - 126
1292 - அசைவி லாத அமரிடைத் தஞ்சிடின்
இசைய தாகும்இ றந்தில னேயெனில்
தசையு லாமுடல் தாங்கிஉய்ந் தானெனா
வசைய தாகுமென் வன்மையும் துஞ்சுமே. - 127
1293 - என்னை எய்தும் இசையது வேயெனின்
மன்னை எய்தும் வசையுரை ஆங்கதன்
றென்னை எய்தினும் எய்துக தந்தைபால்
அன்ன தாதல் அழகிதன் றாலென. - 128
1294 - ஆவ துனனிஎன் னாருயிர் போற்றியே
போவ தேகடன் என்று பொருக்கெனத்
தாவி வான்முகில் தன்னிடைப் போயொரு
தேவு மந்திரம் சிந்தையில் உன்னினான். - 129
1295 - உன்ன லோடும் உருவரு வாதலும்
தன்னை யாரும் தெரிவரும் தன்மையால்
பொன்னு லாய புணரியுட் போயினான்
மின்னு தண்சுடர் மீனுரு வாகியே. - 130
1296 - ஆண்டு போன அவுணன்அம் மாநகர்
மீண்டு செல்கிலன் மேல்விளை கின்றன
காண்டும் நந்தம் கடன்முடிக் குந்துணை
ஈண்டு வைகுதும் என்றவண் மேவினான். - 131
1297 - ஆய காலையில் ஆடகன் செய்திடு
மாயை யாமெனக் கங்குலு மாய்ந்திடத்
தூய போதகத் தொல்படை தோன்றல்போல்
சேயி ருங்கதிர்ச் செல்வன்வந் தெய்தினான். - 132
1298 - ஆங்கு வெய்யவன் அப்படை போலெழ
நீங்கு மாயையின் நீள்நில வற்றிட
ஏங்கி யோடும் இரணிய னாமென
ஓங்கு திங்கள் உததியில் போயினான். - 133
1299 - நீங்கு சூ£¢மகன் நீர்மையை நோக்கியே
வீங்கு தோளுடை வீரன்நம் மாற்றலன்
ஓங்கும் ஆழியுள் ஓடினன் தோற்றெனா
ஏங்கு சங்கம் எடுத்திசைத தானரோ. - 134
1300 - சங்கம் வாயிடைக் கொண்டுதன் சீர்த்தியை
எங்கு ளோரும் தௌ¤ய இசைத்துழிப்
பொங்கு பூதர் புகழ்ந்தனர் வாழியென்
றங்கண் வானவர் ஆசிசெய் தார்க்கவே. - 135
1301 - நின்ற வீரர்கள் நேரலர் சேனையைப்
பொன்று வித்தனர் போரிடைத் தூதுவர்
சென்று காலொடு சிந்தையும் பிற்பட
மன்றன் மாநகர் மந்திரம் எய்தினார். - 136
1302 - மந்தி ரத்துறை மன்னை வணங்கிநீ
தந்த அக்கும ரன்சமர்க் காற்றலன்
உய்ந்தி டக்கொல் உவரையொர் சூழச்சியால்
சிந்தி டக்கொல் அகன்றனன் சிந்துவில். - 137
1303 - என்று தூதர் இசைத்தலும் மன்னவன்
குன்றி வௌ¢கிக் கொடுஞ்சினம் கொண்டிடா
ஒன்று மாற்றம் உரைத்திலன் அவ்வழிச்
சென்ற னன்கனல் மாமுகச் செம்மலே. - 138
- - -
This file was last updated on 18 Nov. 2007
.